ulcer

புண், ஆறாத புண், சீழ்ப்புண், வாய்ப்புண், குடற் புண், உடலில் தோன்றும் கட்டி, விரணம், இரணம், இழிபண்பு, பேரழிவு பரப்புங்கூறு, ஒழுக்கம் பெரிதுகெடுக்குஞ் செய்தி

தமிழ் விளக்கம்

1. ulcer என்றால் பொதுவாக புண் எனப்படுகிறது. இது தோல், சளிச் சவ்வு, குடலின் சுவர்களில் ஏற்படும். இருப்பினும் அல்சர் என்றால் அது குடல்புண் என்றே பொதுவாக அறியப்பட்டிருக்கின்றது. நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. பசி எடுத்ததும் இயல்பாக வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டைத் தவிர்த்தால், இந்த அமிலம் இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தைச் சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண் எனப்படுகிறது. குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம். புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன. சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் காரணமாகவும் குடல் புண் வருகிறது. கலப்பட உணவு, அசுத்த குடிநீர், மோசமான சுற்றுச் சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது. அதிக காரம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு உண்பதாலும், கவலை மன அழுத்தம் காரணமாகவும், வயிற்றில் அதிக அமிலம் சுரந்து குடல் புண் ஏற்படலாம். குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வயிற்றில் வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் (Gastric ulcer), சிறு குடலில் ஏற்படும் குடல் புண் (Duodenal ulcer), பொதுவாக இரண்டையும் சேர்த்து பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்பார்கள்.

English

An open sore in the wall of the stomach or intestine or other internal organs, in the mucous membrane, or on the skin.