Uncle Tom
டாம் மாமா
தமிழ் விளக்கம்
ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் (Harriet Beecher Stowe) என்ற நாவலாசிரியை அடிமைத்தனத்திற்கு எதிராக எழுதிய 'டாம் மாமாவின் குடிசை' என்ற நாவலில், வெள்ளையர்களிடம் அளவுக்கு மீறி பணிவுகாட்டி உரிமைகளை விட்டுக்கொடுத்து, வெள்ளையர்களுடன் இணக்கமாக வாழ கறுப்பின மக்களின் நலத்தை காவு கொடுத்த ஒரு கறுப்பின கதாபாத்திரம். அடிமைத்தனத்தின் பண்பு அடையாளமாகச் சுட்டிக்காட்டப்படும் இகழ்ச்சிக்குரிய பாத்திரம் / மனிதப்பண்பு. அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் அனுபவிக்கும் துயரங்கள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்தாலும், அதைப் பற்றி அமெரிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கறுப்பின அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு வழிகோலிய, உள்நாட்டுப் போருக்கு முறைமுகத் தொடக்கமாகவும் அமைந்தது ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் அம்மையார் எழுதிய ‘அங்கிள் டாம்ஸ் காபின்’ என்ற நாவல்.
அதே போன்றதொரு ஒப்புமையைத் தமிழகத்திலும் பார்க்க முடியும். அந்த நூல் ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’, எழுதியவர் திராவிட இயக்கப் பெண் முன்னோடி மூவலூர் ராமாமிர்தம், வெளியான ஆண்டு 1936. தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டக் கருவியாக அந்த நாவல் பயன்படும் என்று நம்பியே ராமாமிர்தம் அந்த நாவலை எழுதினார். ஒரு படைப்பைப் போராட்டக் கருவியாக நினைத்த முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர் அவராகவே இருக்க முடியும்.
பார்க்க: Tamil Hindu சமூகம் » பெண் இன்று April 10, 2016 - எழுத்தை ஆயுதமாக்கியவர் by ஆதி

English
A term of contempt, based on the character in Harriet Beecher Stowe's antislavery novel Uncle Tom's Cabin (New York: National Era, 1851), referring to a black person whose behavior toward white people is considered servile or whose behavior is seen as antithetical to the interests of African Americans as a group.