unconditional positive regard

நிபந்தனையற்ற நல்லபிமானம்

தமிழ் விளக்கம்

பிரச்சனைகளோடு உதவி தேடி வரும் நபரின் / வாடிக்கையாளரின் பலஹீனங்களைப் பொறுத்துக்கொள்வதை விடவும், அவரை மனிதராக ஏற்றுக்கொண்டு, அவரின் உள்ளார்ந்த மானுட இருத்தலை சமூகப்பணியாளர் அங்கீகரிப்பதுதான் உதவியின் அடிப்படைக்கூறு. இந்த மனோபாவத்தின் அடிப்படையில்தான் குற்றம் பாராட்டாத மனோபாவம் உருவாகும். ஒருவர் தான் நம்பும் / பின்பற்றும் மதிப்பீடுகள், தார்மீகக் கருத்துக்கள் அடிப்படையில், மனிதர்களை ஏளனமாகவோ, நியாயமற்றோ அல்லது குற்றம் காணுகிற முறையிலோ எடைபோடுதல் கூடாதென்பதும், எதையும் பாரபட்சமற்ற முறையில் அணுகவேண்டியதன் அவசியத்தைக் குறிக்கும் கருத்து. ஒரு சமூகப்பணியாளர் தன்னிடம் வருகின்ற வாடிக்கையாளர் பிரச்சனை எதனடிப்படையில் அமைந்திருந்தாலும், தன்னுடைய விருப்பு, வெறுப்பு, நம்பிக்கைகள், மதிப்பீடுகளின் அடிப்படையில் வாடிக்கையாளரின் பிரச்சனைகளை மதிப்பீடு செய்யலாகாது என்பது சமூகப்பணியின் தொழில்நெறி. வாடிக்கையாளர் பற்றிய பாரபட்சமான தீர்மானங்கள், வாடிக்கையாளரின் நடத்தைகளை நிராகரிக்கவே தூண்டும். வாடிக்கையாளரை ஏற்றுக்கொள்ளல் என்பதற்கும் குற்றத்தைப் பாராட்டாமல் பொறுத்தருளல் என்பதற்கும் மயிரிழை வேற்றுமையே உள்ளது. வாடிக்கையாளரின் குற்ற அல்லது ஆபத்தான நடத்தைகள் பற்றிய எச்சரிக்கையும், அதை அந்தந்த சமூக சட்ட நெறிகளின்படி கையாளத் திட்டமிடுதலும், வாடிக்கையாளரை ஏற்றுக்கொள்ளல் என்ற தொழில் நெறியில் அடங்கும்.

English

An element in the social work ethical principles of acceptance and nonjudgmentality in which the professional considers the client to be a person of worth, whose rights and dignity are to be respected without reservation if the effective working relationship is to be viable. This position is maintained by the ethical professional even if the social worker personally does not approve of or condone the client's actions.