unconditioned response (UR)

நிபந்தனையற்ற மறிவினை / துலங்கல் / ஏற்புத் தன்மை / பதிற் குறிப்பு / எதிர்ச் செயல்

தமிழ் விளக்கம்

Response என்றால் ஒரு தூண்டலுக்கு எதிர்வினையாற்றுவது. conditional response என்றால் பழக்க தோஷம், பழக்கமான வெளிப்பாடு, ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்குத் தூண்டும் சூழல். unconditioned response என்றால் எந்தவிதத் தூண்டலுமற்று எதிர்வினையாற்றுவது. எடுத்துக்காட்டாக இவான் பாவ்லோவ் (1849-1936) நடத்திய சோதனைகளில், மணி அடித்து, நாய்க்கு உணவு வழங்கும்போது, மணிச் சத்தம் கேட்கும் நாய்க்கு தன்னிச்சையாக எச்சில் ஊறும். மணிச் சத்தம், உணவு, நாய் சுரக்கும் எச்சில் இம்மூன்றும் பழக்கமான பிறகு, மணிச் சத்தம் கேட்டவுடனே உணவு வழங்காத பட்சத்திலும் நாய்க்கு எச்சில் ஊறும் மறிவினையை நிபந்தனையற்ற மறிவினை என்கிறோம்.
பார்க்க: conditional response - பழக்க தோஷம், பழக்கமான வெளிப்பாடு, ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்குத் தூண்டும் சூழல்.
conditioning - பாராட்டு/ அங்கீகாரம் / வெகுமதி கொண்டு தூண்டியோ அல்லது தண்டனை / இகழ்வது மூலமாகவோ ஒரு செயலை நடைமுறைப் பழக்கமாக்குதல். இதில் இருவகை உண்டு. 1 Classical Conditioning ஒரு நபர் அல்லது உயிரனம் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு இயல்பாக மறுவினையாற்றுவது. 2.operant conditioning வெகுமதி அல்லது தண்டனை மூலமாக எதிர்பார்ப்புகளுக்கேற்ப மறு வினையாற்றச் செய்வது.
conditioned stimulus - நிபந்தனைக்குட்ட்பட்ட தூண்டுதல், ஆக்க நிலைநிறுத்தத் தூண்டல்.

English

A response that occurs without the necessity of prior conditioning. In Ivan Pavlov's (18491936) experiments, the dog's salivation when given food was the UR. Then food was presented after a bell was rung; eventually the dog began to salivate at the sound of the bell, whether or not food was given. Salivation at the sound of the bell was the conditioned response (CR).