unconscious

நினைவிழந்த நிலை, உணர்வு நிலையற்ற நிலை, தன்னுணர்வற்ற நிலை, நினைவில்லா நிலை, உள் மனம், ஆழ்நிலை மனம், ஆழ்ந்த உள்ளம், மயக்கம், சொரணை தப்புதல், பிரக்ஞை தப்புதல்

தமிழ் விளக்கம்

1. மயக்கம் என்பது மூளைக்குத் தேவையான அளவு ஆக்சிசன் சேர்ந்த குருதி கிடைக்கும் அளவு குறையும் பொழுது ஏற்படும் நிலை. உடல் சார்ந்த மயக்கத்தில் `குறு மயக்கம்' (Fainting / Syncope), ‘நெடு மயக்கம்’ (Unconsciousness) என இரு வகை உண்டு. பள்ளிகளில் காலை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறும்போது மாணவர்கள், இவ்வாறு மயக்கமடைவது வழக்கம். இதைக் `குறு மயக்கம்’ என்கிறோம். மூளைக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறு மயக்கம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும் ரத்த ஓட்டம் சரியாகிவிடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது.
2. உள்ளம் (Psyche or mind) என்பது பல அடுக்குகளானது என்பது பிராய்டின் கணிப்பு. வெளிப்படையாகத் தெரியவரும் நிலையில் உள்ள நனவுடை மனம் (Conscious mind), வெளிப்படையாகத் தெரியாத, ஆனால் மனித செயல்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் காரணமாக உள்ள நனவிலி மனம் (unconscious mind), அதற்கும் உள்ளே ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் அடிமனம் (Subconscious mind) என்று மூன்று அடுக்குகள் உண்டு என்கிறார். அடிமனம் தன் முனைப்புக் (Ego) கொண்டது; பாலியல் இணைவிழைச்சு (Sexual instincts) மற்றும் சமூக அளவில் தடுக்கப்பட்ட விலக்குகள் (Taboos) முதலியவற்றால் ஆனது என்று விளக்குகிறார்.

English

In psychoanalytic theory, that region of the mind or psychic structure that is not subject to an individual's immediate awareness and is the seat of all forgotten memories and thoughts, primary process thinking, repressed impulses, biological drives, and the id.