underdeveloped nations
வளர்ச்சியடையா நாடுகள், வளர்ச்சி குறைந்த நாடுகள்
தமிழ் விளக்கம்
ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்து வைத்திருக்கும் வளர்ச்சிக் குறியீடுகளின் படி குறைவான பொருளாதார வளர்ச்சி, குறைவான தனிநபர் வருமானம், குறைவான கல்வியறிவு, ஊட்டச் சத்துக் குறைபாடு, குறைவான ஆயுட்காலம், வேளாண்மைச் சார்பு, பொருளாதாரப் பாதுகாப்பின்ன்மை போன்ற விசயங்களில் போதிய முன்னேற்றமில்லாத நாடுகளை வளர்ச்சி குறைந்த நாடுகள் என்று பட்டியலிடுகின்றனர்.
வளர்ச்சி குறைந்த, வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில வளர்ச்சிக்குறியீடுகளின் படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும், வளர்ச்சி குறைந்த நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இருப்பதனால், பலநாடுகளை எந்த நிலையில் வைப்பது என்பதைத் தீர்மானிக்க இயலவில்லை. காரணம் வளர்ந்துவரும் நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட சில நாடுகள், உயர் சராசரி வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளன. ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள், 'புதிதாக தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள்' என்ற புதிய சொல்லால் (newly industrialized nations) குறிக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளரான கோபி அன்னான் அவர்கள் 'வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழல் / சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்' என்று வரைவிலக்கணம் கூறினார். ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரவியல் பிரிவானது, வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதை தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.
பார்க்க: Fourth World - நான்காவது உலகம். குறைந்த தனி நபர் வருமானம், கல்வியறிவு, சில இயற்கை வளங்கள் மற்றும் குறைந்த நிதி கையிருப்பு விகிதத்தை உடைய வளர்ச்சி குன்றிய நாடுகள், காலனிகள், ஏவலாட்சி முறையிலுள்ள (ஆதரவுக்குட்பட்ட தேசம்) நாடுகள், அணிசேரா நாடுகள் (மூன்றாம் உலக நாடுகள்) குறிப்பாக பங்களாதேஷ், சூடான், எத்தியோப்பியா, மற்றும் சாட் போன்ற நாடுகளைக் குறிக்கும்
Third world Countries - மூன்றாம் உலகம் - மூன்றாம் உலக நாடுகள் என்பது, பொதுவாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய, வளர்ச்சியடையாத நாடுகளைக் குறிக்குமென்றாலும், உண்மையில் பனிப்போர் காலத்தில் அணிசேராத நாடுகளைக் (1. அமெரிக்க, ஐரோப்பியவுடன் இணைந்த NATO ஒப்பந்த நாடுகள், 2. கம்யூனிச நாடுகளோடு இணைந்த வார்சா ஒப்பந்த நாடுகள்) குறிக்கப் பயன்படுத்திய சொல்.
முதலாம் உலக நாடுகள் - அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் NATO ஒப்பந்த நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் - ரஷ்யா, சீனா கம்யூனிச வார்சா ஒப்பந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் - மேற்சொன்னவற்றை தவிர்த்த நாடுகள்.
மேற்கத்திய முதலாளிய நாடுகள் முதல் உலகத்தைச் சேர்ந்தவை. கியூபா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளை சோசலிச நாடுகள் எனப் பட்டியலிட்டு அவற்றை இரண்டாம் உலக நாடுகள் என்கின்றனர். மேலே கூறியவற்றைத் தவிர்த்த ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் எனப்படும்.

English
Those countries of the world that have extremely low rates of literacy and income and few natural resources. They are also called Fourth World countries to distinguish them from Third World or developing countries that have resources and socioeconomic growth. The U.N. designation for these nations is least developing countries.