undersocialized conduct disorder

சமூகமயமாதலின்மையால் உருவாகும் நடத்தைக் கோளாறு

தமிழ் விளக்கம்

நடத்தைக் கோளாறைக் குறிக்கும் வழக்கொழிந்த சொல்லாடல். சகமனிதர்களிடம் அன்பு செலுத்த இயலாத, அவர்களின் உள்ளக் கிடக்கையை உணரமுடியாத, அவர்களுடன் எந்தவிதப் பாசப்பிணைப்பும் ஏற்படுத்த இயலாத காரணங்களால் உறவுகொள்ள முடியாததாலும், அதில் விருப்பமில்லாததாலும் ஏற்படும் நடத்தைக்கோளாறு. இவர்கள் தங்களின் சுயநலத்திற்காகச் சக மனிதர்களுக்குத் தீங்கிழைக்கவோ, அவர்களைத் தங்களுடைய காரியம் நிறைவேறப் பயன்படுத்திக் கொள்ளவோ அல்லது ஏமாற்றவோ தயங்க மாட்டார்கள். அதற்காகக் குற்றவுணர்வு கொள்ளவும் மாட்டார்கள்.
பார்க்க: Conduct disorder - (சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் ஏற்படும்) நடத்தைக் கோளாறுகள் - நடத்தைக் கோளாறு என்பது அந்தந்த வயதிற்குத் தகுந்த நடத்தை நெறிகளையும், சமூக நெறிகளையும் பின்பற்றாது மற்றவரின் உரிமைகளைத் தொடர்ந்து மீறுவது. சிறுவர்களிடத்திலும் இளைஞர்களிடத்திலும் நான்கு வகையான நடத்தைக்கோளாறுகள் பொதுவாகக் கண்டறியப்பட்டுள்ளன. 1. அடாவடியாக நடந்துகொள்ளல் (வலுச் சண்டைக்கு செல்லல் - அச்சுறுத்தல், அடிதடியில் இறங்குதல்), 2.. வன்முறையற்ற வகையில் இழப்பை ஏற்படுத்தல் (சொத்து இழப்பு), 3. ஏமாற்றுதல் திருடுதல், 4. விதிமுறைகளை துச்சமென மதித்தல். இந்த மாதிரியான கோளாறுகள் 10 வயதிற்குள் வந்தால் குழந்தைப்பருவக் கோளாறு என்றும், 10 வயதிற்கு மேல் வந்தால் குமரப்பருவ கோளாறு என்றும் சொல்வர்.

English

An outdated term referring to a type of conduct disorder in which a person has not been able or willing to establish relationships with others that include affection, empathy, or bonding. This person seeks to harm or manipulate others for personal advantage but has no feelings of remorse or guilt.