understimulating environment

கிளர்ச்சியூட்டாத / உயிராற்றலில்லாத / செயல் விரைவற்ற / எழுச்சியற்ற / ஊக்கமூட்டாத / சுறுசுறுப்பளிக்காத சூழ்நிலை

தமிழ் விளக்கம்

ஒருவரின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை / வாய்ப்புகளைப் போதுமான அளவு அணுகவியலாமல் உடல், அறிவு, சமூகம் மற்றும் உணர்வு ரீதியாகத் தவிர்க்கப்பட்ட சூழ்நிலை. எடுத்துக்காட்டாக மீத்திறன் கொண்ட குழந்தைகளைச் சராசரிக் குழந்தைகளாகப் பாவித்துக் கையாளும் வகுப்பறை சூழல், பெயருக்காக நடத்தப்படும் மனநலக் காப்பகங்கள், பிறருடன் அதிகத் தொடர்பற்று வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள், உயிராற்றலில்லாத சூழ்நிலையில் வாழ்பவர்கள் எனலாம்.

English

The condition in which an individual is confined physically, intellectually, socially, or emotionally in such a way that precludes sufficient access to the resources needed for healthy development. Examples include classrooms in which intelligent children are not challenged, drab mental hospitals devoid of opportunity for interaction, and high-rise slums where most residents feel compelled to stay inside.