undifferentiated somatoform disorder

வகைப்படுத்தமுடியாத உடல்மன சீர்கேடு

தமிழ் விளக்கம்

உளக்கோளாறுகள் உடல் உபாதைகளாக உருமாறும் நிலை
பார்க்க: Conversion disorder - எந்தவிதமான வெளிப்படையான காரணங்களின்றி மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் உடல் ரீதியாக வரும் உபாதைகள். வலிப்பு, மயக்கம், உளப் பிரச்சனைகள் உடல் உபாதைகளாக மாறும் தன்மை. உள்ளத்திலிருப்பதை நேரடியாக வெளிப்படுத்த இயலா நிலையில், அப்படி வெளிப்படுத்தினால் சிக்கலுண்டாகும் என்று தெரிவதால், அதை வேறுவிதமாக வெளிப்படுத்துவது, மயக்க மடைதல், வலிப்பு, தசை இயக்க ஒருங்கிணைப்பின்மையால் தள்ளாட்டம், பக்கவாதம் போன்ற அறிகுறிகள்.
Body dysmorphic disorder - உடல்வாகைப் பற்றிய கற்பனையான கவலை - சாதாரண உடல்வாகையும், தோற்றத்தையும் கொண்டிருந்தாலும், தன்னுடைய உடல்வாகிலும் தோற்றத்திலும் குறை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு கவலைப்படுபவர்.
hypochondriasis - கற்பனைப் பிணியாளி, மௌட்டிய நோயாளி, மனவாட்ட நோய்க்காளானவர், மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட - தங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி மட்டுமீறிய கவலை கொண்டிருப்பவர். ஆரோக்கியமாகவே இருந்தாலும் தாங்கள் நோய்வாய்ப்படுவோம் என்ற மனபயத்தில் உள்ளவர்கள். இதன் விளைவாக மயக்கமடைதல், படபடப்பு, நாடித்துடிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும். ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் சான்றளித்தாலும் அதை நம்ப மறுப்பார்கள்.
pain disorder - வலியினால் ஏற்படும் சீர்கேடு, வலியினால் ஏற்படும் துன்பம், வலியினால் ஏற்படும் தடுமாற்றம் - உடலின் ஒரு குறிப்பிட்ட உறுப்பிலோ அல்லது பாகத்திலோ, அல்லது உடல் மண்டலத்திலோ (ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம்) அல்லது உடல் முழுவதும் தொடர்ந்தோ, விட்டுவிட்டோ மருத்துவ ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ உணரப்படும் துன்பம் தரும் உணர்வு. வலி என்பது மருத்துவக் காரணத்தாலோ அல்லது உளவியல் காரணத்தாலோ வருவதால் அதற்கான வியாதி நிர்ணயம் அல்லது குணங்குறி மூலம் நோய் கண்டறியப்பட்டால்தான், அந்த வலிக்குப் பெயரிடப்பட்டு, சிகிச்சையளிக்க முடியும். இல்லையென்றால் உளவியல் காரணங்களோடு சம்மந்தப்பட்ட வலி என்றோ அல்லது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்பு கொண்ட வலி என்றோ பொதுவாகத்தான் குறிக்கமுடியும். கடந்த காலத்தில் இதை உளவியல் காரணத்தால் உடலில் ஏற்பட்ட வலி என்று அழைத்தனர்.

English

One of the somatoform disorders in which the individual experiences only one or a few symptoms longer than six months. It is differentiated from somatization disorder, which has many symptoms over several years and begins before age 30.