Unemployed Parent Program of AFDC (AFDC-UP)

வேலையில்லாத பெற்றோர் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டம்

தமிழ் விளக்கம்

ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவுதல் என்ற திட்டத்தின் (Aid to Families with Dependent Children (AFDC) 1961 ஆம் ஆண்டைய மேம்படுத்தப்பட்ட பதிப்பு. வேலையில்லாத் தகப்பனாரைக் கொண்ட குடும்பங்களும், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பம் என்பதைப் பெருவாரியான அமெரிக்க மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தன. இதற்கு முன்னர், ஆண் தலைமை இல்லாத குடும்பங்களே ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்த நிலையை இத்திட்டம் மாற்றியது. இந்தத் திருத்தமும், 1996 இல் அறிமுகப்படுத்திய தனிப்பட்ட முயற்சி எடுத்து வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துதலுக்கான சட்டத்திற்குப் பிறகு மாறியது.
பார்க்க: Aid to Families with Dependent Children - ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவுதல் - பெற்றோர்களின் மரணத்தாலோ, இயலாமையாலோ அல்லது அவர்களால் கைவிடப்பட்டதாலோ பராமரிப்பை இழந்த குழந்தைகளுக்கு, சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அரசுகளின் (அமெரிக்கா) நிதியைக் கொண்டு செய்யப்படும் நிதியுதவி. அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் அலுவலகத்தின் மூலமும், மாநில மற்றும் மாவட்ட அளவில் மனித சேவைகள் துறையின் மூலமும் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் திட்டம். சில மாநிலங்களில் பெற்றோர், குறிப்பாக தந்தை குடும்பத்துடன் இருந்தாலும் அவர் வேலையற்று இருந்தால் அவரின் குழந்தைகளுக்கும் உதவி அளிக்கப்படுகின்றது.
Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 - தனிப்பட்ட முயற்சி எடுத்து வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துதலுக்கான சட்டம் - அமெரிக்க அரசின் சமூகநலத் திட்டங்களைச் சீரமைக்கக் கொண்டுவரப்பட்ட முக்கியமான சட்டம். இச்சட்டத்தின் மூலமாக சில சமூகநலத் திட்டங்கள் கலாவதியாக, வேறுசில திட்டங்களின் மூலம் கிடைத்த நன்மைகள் குறைக்கப்பட்டன. மாற்றத்திற்கு உள்ளான சில திட்டங்கள் - ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவுதல் (Aid to Families with Dependent Children (AFDC), உணவு அடையாளச் சீட்டு, படிவம், (உணவு பொருட்கள் வாங்க பணமோ, பணயுதவியோ பெறுவதற்காகக் கொடுக்கப்படும் படிவம் Food Stamp program). சமூக நல மொத்த மானியம் (Social Services Block Grants), சிறார் பாதுகாப்புத் திட்டங்கள் (child protection programs), சத்துணவுத் திட்டங்கள் (child nutrition programs), ஈட்டிய வருமானத்தின் மீதான வரித் தள்ளுபடி (earned income tax credit ). எடுத்துக்காட்டாக ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டம், தேவையுள்ள குடும்பங்களுக்கான தற்காலிக உதவி என்று மாற்றப்பட்டு, அக்குடும்பத்துப் பெற்றோர் உதவி பெற ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள் வேலைக்குச் செல்லவேண்டும், உதவிக்காலம் காலவரையின்றி தொடராமல் ஐந்து வருடங்களுக்குள் முடிந்துவிடும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 18 வயதிற்குக் குறைவான திருமணமில்லாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய பெற்றோர் அல்லது உறவினருடன் வசித்தால்தான் உதவி பெறத் தகுதியானவர் என்று கணிக்கப்பட்டனர். ஏற்கனவே குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெரும் பெற்றோர்கள் மீண்டும் குழந்தை பெற்றால் அக்குடும்பத்திற்கு உதவி நிறுத்தப்ட்டது. எல்லோருக்குமான மருத்துவ உதவி உத்தரவாதம் கடுமையான நிபந்தனைக்குள்ளாக்கியது. சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற அகதிகளின் துணை வருமானப் பாதுகாப்புத் திட்டங்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் அமெரிக்கக் குடிமகன் அந்தஸ்து பெற்றால்தான் சில நலத்திட்டங்களுக்கு தகுதியானாவர்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. புலம் பெயர்ந்த அகதிகளுக்கான உதவி ஐந்து வருட காலத்திற்கு மட்டும் என்ற புது நிபந்தனை உருவானது. உணவு அடையாளச் சீட்டு வழங்குவதில் மாநிலங்களின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. முடக்குவாதம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் துணை வருமானப் பாதுகாப்பு திட்டத்திலிருந்து விலக்கழிக்கப்பட்டனர். இந்தக் கட்டுப்பாடுகளின் விளவு என்னவென்று முழுதுமாக அறியப்படவில்லை.
man in the house - வீட்டிலிருக்கும் ஆண்துணை - தனித்திருக்கும் தாய்மார்கள் திருமணமாகாத அல்லது திருமணமான ஆண்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலோ அல்லது தொடர்பு வைத்திருந்தாலோ அந்த ஆணின் மூலமாக அந்தக் குடுமபத்திற்கும், அக்குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கும் ஆதரவு கிடைக்கும் என்ற அனுமானத்தில், சேர்ந்திருக்கும் தாய்மார்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் நலஉதவிகள் தேவை இல்லை என்ற அமெரிக்காவீன் சில மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை. இந்த நடைமுறை தவறென்று சுட்டிக்காட்டப்பட்டதால் விலக்கிக் கொள்ளப்பட்டது.

English

The 1961 revision of Aid to Families with Dependent Children (AFDC) regulations, which in many states extended eligibility to families that included unemployed fathers. Before AFDC-UP, eligibility in most states was restricted to poor families who had no male head of house- hold. The program was eliminated in 1996 with the Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 (P.L. 104-193). See also "man in the house" rule.