unemployment compensation

வேலையின்மை இழப்பீடு

தமிழ் விளக்கம்

பல நாடுகள் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவிகளை சமூக நலனில் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பின்மை நன்மைகள், வேலைவாய்ப்பின்மை காப்புறுதி (Unemployment insurance), பொதுநலன், வேலைவாய்ப்பின்மை இழப்பீடு (Unemployment Compensation) மற்றும் மறுபயிற்சியில் உதவிக்கான (Retraining & Skill training) மானியங்கள் போன்றவற்றை உள்ளடக்கியவை. இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கம் தற்காலிக வறுமையை மட்டுப்படுத்துவது மற்றும் மிகவும் முக்கியமாக பணியாளர்கள் பெரும்பாலான நேரத்தை வேலை தேடுவதில் செலவிட ஏதுவாக்குவது போன்றவை ஆகும்.
அமெரிக்காவில் ஒருவர் வேலைவாய்ப்பின்மை காப்புறுதி உதவித்தொகை வாங்குவது அவரது தனிப்பட்ட முந்தைய வருவாய் (பணிபுரிந்த நேரம் அல்ல, குடும்ப அளவு மற்றும் பல) சார்ந்தது. மேலும் பொதுவாக ஒருவரது முந்தைய வருவாயில் மூன்றில் ஒரு பகுதி இழப்பீடாகக் கிடைக்கும். இதற்குத் தகுதி பெறுவதற்கு ஒருவர் அவர் சார்ந்திருக்கும் மாநிலத்தில் குறைந்தபட்சம் ஒரிரு ஆண்டுகளாவது குடியிருப்பவராக இருக்க வேண்டும் மற்றும் ஐயத்திற்கிடமின்றி வேலையிலும் இருந்திருக்க வேண்டும். இந்த நடைமுறை 1935 ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டது. எனினும் குடிமக்களில் 90% பேர் வேலைதேடுவோர் பதிவேடுகளில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட பருவம் சார் தொழில்களில் பணியாற்றுபவராக இருந்தால், இந்த முறை ஒருவர் பணியில் இல்லாத பருவத்தில் அந்த பணியாளருக்கு ஊதியம் (இழப்பீடு) வழங்கும் முறையால், அந்த நபருக்கு அந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருக்க ஊக்குவிக்கும்.

English

Financial assistance for eligible persons who have temporary loss of income as a result of unemployment. In the United States, this assistance is provided primarily through the Unemployment Insurance program.