Unemployment Insurance
வேலைவாய்ப்பின்மைக் காப்பீடு
தமிழ் விளக்கம்
பல நாடுகள் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவிகளை சமூக நலனில் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பின்மை நன்மைகள் வேலைவாய்ப்பின்மை காப்புறுதி (Unemployment insurance), பொதுநலன், வேலைவாய்ப்பின்மை இழப்பீடு (Unemployment Compensation) மற்றும் மறுபயிற்சியில் உதவிக்கான (Retraining & Skill training) மானியங்கள் போன்றவற்றை உள்ளடக்கியவை. இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கம், தனிமனித காரணங்கள் அல்லாமல், பொருளாதார ஏற்ற இறக்கங்கள், சந்தையின் கட்டமைப்பு, அரசின் பொருளாதாரக் கொள்கைகள், கல்வி, திறமை, போன்ற பல சமூகப் பொருளாதாரக் காரணங்களினால் ஏற்படக்கூடிய தன்னிச்சையற்ற வேலையின்மையால் (Involuntary Unemployment) பாதிப்புக்குள்ளாவோருக்கு உதவுவது ஆகும். இந்த உதவி பெறுவதற்காக ஒவ்வொருவரும் அவர் பணிபுரியும் காலத்தில் சந்தா செலுத்தி இருக்கவேண்டும். அப்படிச் செலுத்திய ஒருவர் வேலையின்மையால் பாதிக்கப்படும்போது, அவரது தனிப்பட்ட முந்தைய வருவாயில் மூன்றில் ஒரு பகுதி இழப்பீடாகக் கிடைக்கும். இந்த இழப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது, அதற்கான தகுதி, இழப்பீட்டின் அளவு போன்றவை அமெரிக்காவில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
English
The program established as part of the Social Security Act to protect workers temporarily from economic hardship caused by involuntary job loss. The federal government levies a payroll tax on nearly all employers and credits most of these funds to each state's unemployment insurance fund. When an eligible worker becomes unemployed, compensation is paid for a specified time. Applications, eligibility determination, and processing of funds are, for the most part, handled through the states' public employment offices. The amount and duration of benefits vary from state to state.