unemployment rate

வேலைவாய்ப்பின்மை விகிதம்

தமிழ் விளக்கம்

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு 'வேலைவாய்ப்பில்லாத பணியாளர்கள்' என்பவர்கள் தற்போது பணியில் இல்லாமல் இருந்து, ஆனால் ஊதியத்திற்கு வேலை செய்யும் விருப்பமும் திறமையும் கொண்டவர்கள் மற்றும் தற்போது வேலை தேடுபவர்கள் என விவரிக்கிறது. வேலைவாய்ப்பின்மை விகிதம் பின்வருமாறு கணக்கிடப்பட்டு சதவீதத்தில் தெரிவிக்கப்படுகிறது. Unemployment rate = Unemployed workers / Total labour force. ஐரோப்பிய ஒன்றியத்தில், 15 வயதிலிருந்து 74 வயது வரை உள்ளோரில் வேலையில்லாமல் இருக்கும் நபர்கள், நான்கு வாரங்களாக வேலை தேடிவந்தால் மற்றும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வேலையை ஆரம்பிக்கத் தயாராய் இருந்தால் அத்தைகைய நபர்களை வேலைவாய்ப்பற்றோர் என வரையறுக்கிறது. வேலைவாய்ப்பின்மை விகிதம் எத்தனை பேர் ஊதியத்திற்கு வேலை செய்யவில்லை, ஆனால் ஊதியத்திற்காக வேலை தேடுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. அனைத்து மக்களில் யார் உண்மையில் வேலை செய்யாமல் இருக்கிறார்கள் அல்லது ஊதியமில்லாமல் வேலைசெய்கிறார்கள் என மக்களின் எண்ணிக்கையுடன் மறைமுகமாக மட்டுமே இது தொடர்புடையாக இருக்கிறது.

English

The economic and statistical measure of the proportion of people without jobs who are willing and able to work, relative to the number of people in the labor force. The figure is often used by social and economic planners to help determine actual and potential economic circumstances of specific population groups, such as teenagers, black people, college graduates, people older than age 50, women, and blue-collar workers. The measure may also be manipulated by governments for political ends to reduce the apparent number of people without work opportunity.