unfreezing
முடங்கிப் போகாத, உறையாத, ஊக்கமிழக்காத, ஆர்வமிழக்காத, விலகிநடக்காத, மாறத்தயாராயுள்ள
தமிழ் விளக்கம்
ஒருவர் தனது அல்லது பிறரின் சமூக அந்தஸ்து மற்றும் மரபுகளைப் பற்றி கொண்டிருக்கும் கெட்டிதட்டிய அனுமானங்களை மறுபரிசீலனை செய்ய உதவி, அதன் மூலம் மன மாற்றத்திற்கான தூண்டுதலை ஏற்படுத்த உளச் சிகிச்சையாளர்களும், சமூகக் குழுப்பணியாளர்களும் கையாளும் நடைமுறை. இந்த நடைமுறை கர்ட் லெவின் (Kurt Lewin 1890 –1947) என்ற உளவியலாளர் பிரேரிபித்த மாற்றத்திற்கான மூன்று நிலைகளில் (1.unfreezing உருக்குதல் 2. Change மாற்றுதல் 3. Refreeze கெட்டிப்படுத்தல்) முதல் நிலையாகும்.
English
An element in psychotherapy, especially group therapy and social group work, in which clients are helped to reexamine rigidly held assumptions about themselves and others (that is, status symbols and familiar social conventions) to achieve motivation for change.