Uniform Crime Reports (UCR)

ஒரே சீரான (ஒருபடித்தான தரத்தை அடையும் பொருட்டு) குற்ற அறிக்கைகள்

தமிழ் விளக்கம்

அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்தின், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்தேறிய குறிப்பிட்ட வகைக் குற்றங்களைப் பற்றி தகவல் தொகுப்பு. அமெரிக்கக் காவல் துறையிடமிருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு, 1937 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தகவல் தொகுப்பு வெளியாகிறது. ஒரே சீரான குற்ற அறிக்கைகள் நீண்ட கால குற்றப்போக்குகளை அனுமானிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், இது படித்தவர்கள் செய்யும் பொருளாதார மோசடிகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்ற வகைகளைக் கணக்கிலெடுக்காததாலும், மக்களை நம்ப வைக்க சில குற்றவகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும், இந்தத் தகவல்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
பார்க்க: Serious crime index - கொடுங் குற்ற குறியீட்டெண் - கொடுங்குற்ற குறியீட்டெண் என்பது, அமெரிக்காவின் மைய புலனாய்வுத் துறையின் ஒரே சீரான குற்ற அறிக்கை தயாரிக்கும் முயற்சியின் ஒரு பகுதி. எட்டு வகையான குற்றங்கள் கொடுங்குற்றங்கள் என்று பட்டியலிடப்பட்டு அதில் நான்கு வகை குற்றங்கள் மனிதருக்கு எதிராகவும் (கொலை, கட்டாயக் கற்பழிப்பு, காயமுண்டாகுமளவு தாக்குதல், மற்றும் வழிப்பறி) மற்ற நான்கு வகை உடமைகளுக்கு எதிராகவும் (கலவரம் செய்தல், வாகனத் திருட்டு, வீடுபுகுந்து கொள்ளையடித்தல், 50 டாலருக்கும் அதிகமான களவு) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் குறைந்த வருவாய்ப்பிரிவினரால் செய்யப்படுவது. வசதியானாவர்கள் செய்யும் மோசடி, கையாடல், தவறான விளம்பரம், வரி ஏய்ப்பு, மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற குற்றங்கள் கொடுங் குற்ற வரிசையில் சேர்க்கப்படாதது பொருளாதார பாராபட்ச தன்மையை காட்டுவதாக அமைகின்றது.
National Incidence-Based Reporting System (NIBRS) - (குற்ற) நிகழ்வுகளை அறிக்கையிடும் தேசிய அமைப்பு - தன்னுடைய ஒரே சீரான குற்ற அறிக்கைகளை மேம்படுத்த, மத்திய புலனாய்வு துறையால் (Federal Bureau of Investigation (FBI) 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் சேகரிப்பு மற்றும் அறிக்கையிடும் நடைமுறை. ஒரே சீரான குற்ற அறிக்கைகளில் பயன்பட்ட 8 வகையான குற்றங்களுக்கு பதிலாக 14 வகையான குற்றங்கள் சேர்க்கப்பட்டன. NIBRS இல் போதை மருந்து உபயோகம், ஆயுதங்கள் கொண்டு குற்றமிழைத்தல், கள்ளநோட்டு, மோசடித்தனம், மற்றும் பிற தீவிரம் குறைந்த குற்றங்கள் சேர்க்கப்பட்டன. NIBRS இல் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்கள், குற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் உடமை இழப்பு, மீட்கப்பட்ட உடமைகள், ஒரே குற்றத்தில் உள்ளடங்கிய பல குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களும் இணைக்கப்பட்டன. ஒரே சீரான குற்ற அறிக்கையில் கையாளப்பட்டது போன்றே எல்லாத் தகவல்களும் சட்ட ஒழுங்கு அமலாக்கத் துறையினரிடமிருந்தே (காவல் துறை) பெறப்பட்டன.
National Crime Victimization Survey (NCVS) - குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோரைப் பற்றிய தேசிய கணக்கெடுப்பு - இது அமெரிக்க அரசின் நீதித் துறையால் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடக்கும் குற்றச் செயல்களைப் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும் வெளியிடப்படும் ஆண்டறிக்கை. இது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு அதை தொகுத்து வெளியிடும் மைய புலனாய்வுத் துறை (Federal Bureau of Investigation's (FBI's) வெளியிடும் அறிக்கைகள் போலல்லாது, 12 வயதைக் கடந்த அமெரிக்கர்களிடம், காவல் துறையினரால் பதிவு செய்யப்படாத, அவர்களால் குற்றமென்று கருதப்பட்ட நிகழ்வுகளை பல அடுக்கு மாதிரி புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி (stratified random sample) எடுக்கப்பட்ட பேட்டிகளின் மூலம் திரட்டப்படும் தகவல்களைக்கொண்டது. இந்த தேசியக் கணக்கெடுப்பின் மூலம் 50 சதவீத வன்முறைக் குற்றங்களும் 60 சதவீத பிற குற்றங்களும் காவல் துறையினரிடம் புகார் செய்யப்படுவதில்லை என்று தெரிய வருகிறது

English

Data about the number of crimes committed in specified categories during identified time periods, published by the Federal Bureau of Investigation. The information has been published since 1937 and is based on input from most of the nation's police departments. Although the UCR is useful to researchers, especially in determining longterm crime trends, it has been criticized as de-emphasizing white-collar crime and racketeering and for relying too much on police reports that have public relations motivations. See also National Incident-Based Reporting System (NIBRS) and the National Crime Victimization Survey (NCVS).