unipolar disorder

ஒருமுனைச் சீர்கேடு

தமிழ் விளக்கம்

ஸ்திரமற்ற உணர்வு நிலைகளை காட்டும் பலவகையான மனநிலைக் கோளாறுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட வழக்கொழிந்த சொல். எடுத்துக்காட்டாக உளச் சோர்வுடனிருத்தல் அல்லது உளக்கிளர்ச்சியோடு இருத்தல். கண்டறியப்பட்ட ஒருமுனைச் சீர்கேட்டில் அதீத உளச்சோர்வு சீர்கேடு (depressive disorder), சலிப்புடனிருத்தல், (குறாவு, மகிழ்வின்றிய கோளாறு) (dysthymic disorder) முக்கிய அறிகுறிகள்.
பார்க்க: (affective disorder) - உணர்ச்சி வயப்படுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் கோட்டித்தனம் / பைத்தியம் / அறிவிழத்தல்.
bipolar disorder - இருமனக் (மனத் தளர்ச்சி X மன எழுச்சி - சோகம் X களிப்பு) குழப்பச் சீர்கேடு, மந்த - மிகை எழுச்சிக் குழப்பச் சீர்கேடு, இருமனக் கலப்புக் குழப்பம் - ஒருவரின் உளப்பாங்கிலும் (mood), உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட வெளிப்பாட்டிலும் (affect) ஏற்படும் கோளாறு. இது கடந்த காலத்தில் மனத் தளர்ச்சி (depressive) X மன எழுச்சி (manic) நோய் என்று அறியப்பட்டிருந்தது. இது இருவகைப்படும். மனவெழுச்சி வகையில் (மிகை இயக்கம், பரவச நிலை, கவனச் சிதறல், அழுத்தமான பேச்சு, பகட்டுத்தனம்) போன்ற அறிகுறிகளும், மனச் சோர்வு வகையில் (ஆழ்ந்த சோகம், எதிலும் அக்கறையின்மை, தூக்கமின்ன்மை, பசியின்மை, தன்முனைப்பின்மை, சிந்தனைத்திறன் குறைதல்) போன்ற அறிகுறிகளும், இவை இரண்டும் மாறிமாறி வரும் மூன்றாம் வகையும் இதிலடங்கும். மனவெழுச்சி சம்பந்தப்பட்ட அறிகுறிகுறிகளை இருமனக் குழப்பச் சீர்கேடு I என்றும், மனச்சோர்வு சம்பந்தப்பட்ட அறிகுறிகளை இருமனக் குழப்ப சீர்கேடு II என்றும் வகைப்படுத்துகின்றனர்.

English

A rarely used term referring to a mood disorder in which only one side of the emotional continuum is present. Almost invariably this side is depression. See also affective disorder and bipolar disorder.