United Nations Children's Fund (UNICEF)

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம்

தமிழ் விளக்கம்

இரண்டாம் உலகயுத்தத்தின் போது பாதிப்புக்குள்ளான நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் 11.12.1946 ஆம் தேதி,ஆரம்பிக்கப்பட்டது. 1953 இல் ஐக்கியநாடுகள் சபையின் நிரந்தர அமைப்பாகி, இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களுக்கான அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. இருப்பினும், இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் நலன் தொடர்பான வசதி வாய்ப்புக்களைப் பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை, உறுப்பு நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது. யுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ்வரும் யுனிசெஃப் நிறுவனம் ஐந்து முக்கிய குறிக்கோள்களை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் கல்வி, ஏற்பூசி (தடுப்பூசி) ஏற்றல் (Immunisation), எச்.ஐ.வி/எய்ட்ஸ், சிறுவரின் பாதுகாப்பு மற்றும் சிறார் பருவ (Early childhood) நலன்.
இவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

English

An agency of the United Nations established in 1946 as the U.N. International Children's Emergency Fund. Its primary goal is to provide health, education, and social services to children, especially in underdeveloped nations. It is financed by voluntary contributions from nations and individuals.