United Nations Development Program (UNDP)

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டம்

தமிழ் விளக்கம்

இது உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப உதவி வழங்கும் அமைப்பாகும். அமெரிக்காவில் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு, 1965 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1990 லிருந்து மனித வளர்ச்சி அறிக்கை மற்றும் மனித வளர்ச்சிச் சுட்டெண்களை வெளியிட்டு வருகின்றது. இதன் மிகப் பெரும் உதவி வழங்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது இதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ஜப்பான், நெதர்லாந்து, நார்வே, சுவீடன், ஐரோப்பிய ஒன்றியமும் உதவி வழங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் இலக்குக்குகளாக, மக்களாட்சி அரசை வலுப்படுத்தல், வறுமை ஒழிப்பு, கடும் இக்கட்டான நிலையை அடையாமல் காப்பதும் உதவுதலும். (Crisis Prevention and Recovery), ஆற்றலும் சுற்றுச் சூழல் மேம்பாடு, எச்ஐவி / ஏமக்குறைவு (AIDS) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது வளர்ந்து வரும் நாடுகள் சரியான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல உதவி வருகின்றது.

English

Established by the United Nations in 1965 to help nations maximize their natural and other resources by providing expertise and resources, the UNDP also works with other U.N. organizations to provide emergency relief services; upgrade educational levels of population groups; and, in cooperation with the World Bank, provide funding for development projects.