United Nations Disaster Relief Organization (UNDRO)

ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் நிவாரண அமைப்பு (UNDRO)

தமிழ் விளக்கம்

பேரிடருக்கு ஆட்பட்டவர்களுக்கு உதவும் அரசு, குழுக்கள், தன்னார்வத் தொண்டர்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய நாடுகள் சபையால் 1971 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பு பேரிடர்களை மூன்றாக வகைப்படுத்தியுள்ளது. 1. வெள்ளம், சூறாவளி, பூமியதிர்ச்சி, மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற திடீர் பேரழிவுகள் 2. வறட்சி, தொற்றுநோய்கள் என்று சிறிது, சிறிதாக வளர்ந்து உருவாகும் பேரிடர்கள் 3. போர்கள் மற்றும் இனக் கலவரங்கள் போன்று மனிதனால் உருவாகும் பேரிடர்கள். மனிதர்களால் உருவாக்கப்படும் மூன்றாவது வகையான பேரிடர் சம்பவங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் நிவாரண அமைப்பு நிவாரணப் பணியில் ஈடுபடுவதில்லை.

English

An office established in 1971 by the United Nations to coordinate the efforts of nations, groups, volunteers, and individuals in assisting populations experiencing disasters. UNDRO classifies disasters according to three general types: (1) sudden disasters, such as floods, hurricanes, earthquakes, and volcanic eruptions; (2) slow-developing disasters, such as droughts and epidemics; and (3) human-caused disasters, such as international wars and genocide. UNDRO does not participate in relief for human-caused disasters.