United Nations Educational, Scientific, and Cultural Organization (UNESCO)

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு

தமிழ் விளக்கம்

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கியத் துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 இல் உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. சமாதானத்தை ஏற்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல். கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையாடல்களை மேம்படுத்துதல் ஆகியவை இந்நிறுவனத்தின் நோக்கங்கள் ஆகும்.

English

An agency of the United Nations established in 1945 with headquarters in Paris. Its primary objectives include promoting the free interchange of ideas and cultural and scientific accomplishments, fundamental education for all people, and preserving the cultural heritage of humanity.