universal eligibility

எல்லோருக்குமான தகுதி, இயல்பாக எல்லோருக்கும் உரித்தாகக் கொள்ளத்தக்க

தமிழ் விளக்கம்

தேவையை அடிப்படையாகக் கொள்ளாமல், பொருளாதார நிலையைக் கருத்தில் கொள்ளாமல், இடம் / இனச் சூழலை கருத்தில் கொள்ளாமல், ஒரு நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் சில சேவைகளை, பயன்களை ஒரே அளவில் / ஒரே மாதிரியாக வழங்கும் கொள்கை நடைமுறை. இது வரையறுக்கப்பட்ட தகுதிக்கு நேர் எதிரானது.
பார்க்க: selective eligibility - வரையறுக்கப்பட்ட தகுதி, குறிப்பிட்ட தகுதி - முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரையறைகளின்படி ஒரு உதவியைப் பெறத் தகுதியானவர் என்று தேர்வுசெய்யப்பட்டவருக்கு, அவரின் குறிப்பிட்ட சூழ்நிலையையும், பொருளாதார நிலையையும், சிறப்புத் தேவைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு செய்யப்படும் உதவி. இது அனைவரும் தகுதிபெற்றவர்கள் (universal eligibility) மற்றும் சிலருக்காக வழங்கப்படும் விதிவிலக்கான தகுதிகளிருந்து (exceptional eligibility) மாறுபட்டது.
demogrant - மக்களுக்காக வழங்கப்படும் உதவித் தொகை / நன்மை அல்லது அரசு உதவி - வருமானம், வேலைவாய்ப்பு, மற்றும் இதர தகுதிகளைக் கணக்கில் கொள்ளாமல், நாட்டின் பொது வருவாயிலிருந்து மக்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு (வயது, பாலினம், குழந்தமை) வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள். உ.ம் குறிப்பிட்ட வயது வந்த முதியோர் எல்லோருக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள், மகளிருக்கான பேறுகால உதவிகள் போன்றவை.

English

A social services policy in which services or benefits are provided at the same rate to all citizens or residents of a nation without regard to their specific needs, economic status, or circumstances. When applied, this policy can take the form of such universal programs as the family allowance system in some nations. This concept is contrasted with the policy of selective eligibility. See also demogrant.