universal programs

அனைவருக்குமான திட்டங்கள், உலகளாவிய திட்டங்கள்

தமிழ் விளக்கம்

வருமானம், தேவை போன்ற தகுதிகளினடிப்படையில் அல்லாது, ஒரு நாட்டிலோ அல்ல்து பிரதேசத்திலோ வாழும் அனைவரும் பெற்று அனுபவிக்க முடிந்த சமூகநலத் திட்டங்கள். அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களையும், மருத்துவக் கவனிப்பு திட்டத்தையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
பார்க்க: Medicare - மருத்துவக் கவனிப்பு - அமெரிக்காவின் முக்கியமான இரண்டு மருத்துவ திட்டங்கள் medicaid என்ற மருத்துவ உதவியும், medicare என்ற மருத்துவக் கவனிப்பும். medicaid என்பது குறைந்த வருமானப் பிர்வினருக்கான, அதுவும் தகுதிச் சோதனைகள் மூலமாத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கானது. medicare என்பது மருத்துவக்காப்பீட்டிற்கு இணையானது. தொடர் சந்தா (பிரீமியம்), செலுத்தியவர்களுக்கு, 65 வயதிற்கு மேல் இந்தக் காப்பீட்டு உதவி கிடைக்கும் சில நோய்களால் பாதிப்படைந்தவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவி கிடைக்கும். சில நேரங்களில் இரண்டு திட்டங்களின் மூலமாகவும் பயன் பெறலாம்.
Medicaid - மருத்துவ உதவி - மருத்துவமனை சென்று சிகிச்சை பெற செலவழிக்க இயலாதவர்கள் என்று தகுதிச் சோதனைகள் மூலம் (குறைந்த வருவாய்ப் பிரிவினர்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசே மருத்துவச் சிகிச்சைக்கான செலவினங்களைத் தந்துதவும் திட்டம். சுகாதாரப் பணிகள் நிதியத்தின் மேற்பார்வையில் அமெரிக்காவின் மத்திய, மாநில அரசுகளின் நிதிஉதவியுடன் உள்ளாட்சி அமைப்புகள் இந்த திட்டத்தை அமுல்படுத்துகின்றன. துணை வருமானப் பாதுகாப்பு திட்டப் பயனாளிகள், அந்தந்தப் பகுதி சமூகப்பாதுகாப்பு அலுவலகங்கள் மூலம் இந்த திட்டத்தின் பயனைப் பெறுவர்.

English

Social welfare programs that are open to everyone in a nation who falls into a certain category. These programs do not subject people to individualized tests of income or need. Social security and Medicare are examples of universal programs in the United States (public assistance and Medicaid are selective programs).