universe

குறிப்பிட்ட இனப்பரப்பு முழுமைத் தொகுதி, பொதுவாக ஏற்றுக்கொண்ட பொருள்

தமிழ் விளக்கம்

பிரபஞ்சம் என்றால் நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகிய ஐந்து பொருட்களைக் குறிக்கும். ஆனால் சமூகப்பணியிலும், சமூகவியலிலும் பிரபஞ்சம் என்றால் அது குறிப்பிட்ட இனப்பரப்பை, நிகழ்வுகளைக் குறிக்கும். ஆய்வுகள் எப்பொழுதும் எண்ணளவு (குடித்தொகை - population) தொகையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதால், இதை “குடித்தொகை மாதிரிகள்” என அழைப்பர். ஒரு மிகச்சிறிய குடித்தொகையை ஆராய்வதற்கு மாதிரி வேண்டியதில்லை. ஒரு பெரும் குடித்தொகையில் உள்ள எல்லோரையும் தனித்தனியாக மதிப்பீடு செய்தல் கடினமாகையால் அக் குடித்தொகையின் இயல்புகளைக் கண்டறியக் கூடிய, அச்சொட்டான மாதிரிகள் அவசியமாகின்றன. திட்டவட்டமாக நன்கு வரையறை செய்யப்பட்ட பொருளடக்கத்தைக் கொண்ட மாதிரிகள் “வரையறுக்கப்பட்ட பிரபஞ்சங்கள்” (Finite universe) என்று அழைக்கப்படும். உதாரணமாக ஒரு பள்ளிக்கூடத்திலுள்ள மாணவர்களின் தொகுதியானது வரையறுக்கப்பட்ட பிரபஞ்சமாகும். இதற்கு மாறுபாடானது “முடிவிலியாகிய பிரபஞ்சம்” (Infinite universe). உதாரணமாக, ஒரு வானொலி நிகழ்ச்சியை எத்தனை பேர் கேட்கின்றார்கள் என்பதைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியாது. வரையறுக்கமுடியாத குடித்தொகையை, நிகழ்வை, முடிவிலிப் பிரபஞ்சம் என்கிறோம்.

English

A term used in research to designate a group of people or objects that are identified as the whole from which a sample is taken. In voter preference polls, for example, this universe consists of all potential voters. See also population.