unprofessional
தொழில்முறை தவறிய, துறைமுரணிய, பணித்துறை ஒழுங்காசாரத்திற்கு மாறான, துறைச்சார்பற்ற, துறைமைசாரா நடத்தை
தமிழ் விளக்கம்
ஒரு சிறப்புத் தொழிலினர், அவருடைய தொழிலுக்கென்று வரையறுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் தரத்தில் தொழிலைச் செய்யத் தவறுவது. தன் தொழில் விதிமுறைகளுக்கு மாறாக, தொழிலில் தவறிழைப்பது. இது தொழிலுக்கென்று வகுக்கப்பட்ட நன்னடத்தையைப் பின்பற்றாதது, தொழில் அறிவை துஷ்பிரயோகம் செய்வது, தொழிலுக்கு உரிமம் வழங்கும் சட்ட நிபந்தனைகளை மீறி நடந்துகொள்வது போன்ற நடத்தைகளை உள்ளடக்கும். இந்த சொற்பிரயோகத்தை சிறப்புத் தொழில் அல்லாத அல்லது வாழ்க்கைத்தொழிலாக எதையும் மேற்கொண்டிராதவற்றுடன் இணைத்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
.
.
English
A term applied to behavior engaged in by a professional during the course of practice that does not measure up to the standards of the profession. Usually it is conduct in violation of the profession's code of ethics or misuse of knowledge or the laws pertaining to the licensing of the profession in the relevant jurisdiction. The term is not to be confused with nonprofessional.