unworthy poor

இயல்பிற்கு ஒவ்வாத, மானக்கேடான, தகுதியற்ற, யோக்யதையில்லாத, உதவி பெறத் தகுதியற்ற ஏழை, அபாத்திரன், தராதரமற்ற (தரம்+அதரம்) ஏழை

தமிழ் விளக்கம்

வேலை செய்ய விருப்பமற்ற, சோம்பலான, பிறரால் ஏற்றுக்கொள்ள முடியாத நேர்மையற்ற நடத்தைகளால் வறுமைக்கு ஆட்பட்டவர்களை ஏளனமாகக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல். சுருக்கமாக உதவி பெறத் தகுதியற்ற ஏழைகள். வரியவர் சட்டம் அமலில் இருந்த கடந்த காலத்தில், அரசு உதவிக்குத் தகுதி படைத்த (விதவைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், குழந்தைகள்) ஏழைகளைலிருந்து பிரித்தறிய உபயோகப்படுத்தப்பட்ட சொற்பிரயோகம். இப்பொழுது இந்த வார்த்தை அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படாவிட்டாலும், மனிதர்களின் இயலாமை எங்கெல்லாம் ஏளனத்துடன் பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வார்த்தையின் தாக்கம் இருப்பதாகப் பொருள் கொள்ளலாம்.

English

A pejorative term applied to poor people who were considered too lazy to work or too dishonest to be acceptable in polite society. This designation was used primarily before the 20th century to distinguish people who did not "deserve" public assistance from the "worthy poor" (such as widows and people with disabilities) who did. The term is no longer used officially, but its underlying philosophy is still held by many. See also victim blaming.