uppers
தூண்டிகள், தற்காலிகமாக மூலையைச் சுறுசுறுப்பாக்கி, களைப்பைப் போக்கும் மருந்து
தமிழ் விளக்கம்
மூளையின் புறப்பகுதிகளைத் தூண்டி தற்காலிக விழிப்பு நிலையையும், பரவச நிலையையும், நன்னிலை உணர்வையும் தூண்டும் ஒரு மருந்துப்பொருள். சோர்வைப் போக்கவும், குழந்தைகளிடம் உள்ள படபடப்புத் தன்மையை மாற்றவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. மனவெழுச்சித் தூண்டிகள் என்றும், துருதிகள் என்றும் அழைக்கப்படும் இந்த மருந்தை நீண்ட நாள் பயன்படுத்தும்போது, அந்த மருந்தை உடல் படிப்படியாக ஏற்றுக்கொண்டு, இயல்பான மனவெழுச்சிக்குக் கூட அதிக அளவு மருந்து தேவைப்படும் நிலையை உருவாக்கும். இதனால் மிகு சோர்வும், மாரடைப்பும், மனச்சிதைவு நோயும் உண்டாகும். மரணம் கூட ஏற்படலாம்.
English
Slang for amphetamines, the controlled substances that have been used to control weight and to keep people awake and alert. When abused they are psychologically and physiologically addictive.