upward mobility
மேல்நோக்கிய நகர்வு
தமிழ் விளக்கம்
தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் தேசங்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டைக் குறிக்கும் சொல். பல நாடுகளில் பொருளாதார முன்னேற்றத்தின் விளைவாக அதிகரித்த வேலைவாய்ப்பு, ஊதிய உயர்வு, நிலையான விலை, இயற்கை வளங்களைத் திறனுடன் பயன்படுத்தல், அரசியல் தளத்தில் ஏற்பட்ட ஆரோக்கியமான மாற்றங்களால் ஏற்பட்ட கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு மேல்நோக்கிய நகர்வை பல தரப்பினருக்கும் சாத்தியமாக்கியது. இதனால் நல்ல கல்வியும், நல்லவேலையும் பலருக்குச் சாத்தியமானது.
பார்க்க: Downward Mobility - இறங்கு முகம், கீழ்நோக்கிச் சரிகின்ற நிலை, கீழ்நோக்கி நகர்தல் - சமூகப் பொருளாதார நிலையில் தனிமனிதர்கள், குழுக்கள், மற்றும் நாடுகள் இறங்கு முகம் காணல். நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பின்னடையும்போது, வேலையின்மை, தகுதிக் குறைவான வேலை, குறைந்த ஊதியம், பணவீக்கம், இயற்கை வளங்கள் குறைதல், அரசியல் ஸ்திரமின்மை போன்ற நிலைமைகளால் மேலும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும். தனிமனிதர்கள் வாழ்வில் பின்னடைவு என்பது கல்வியைத் தொடர முடியாமை, ஆரோக்கியம் பேணமுடியாமை, இடப்பெயர்வு, இயல்பற்ற நடத்தைகளால் பொருளாதார விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவார்.

English
Socioeconomic advances by individuals, groups, or nations. In nations this is due to good and productive economic conditions that result in high employment and increased wages, stable prices, better use of natural resources, political changes, and enhanced opportunities for education and cultural development. In individuals it is also a common result of getting better education and jobs and exploiting opportunities. See also downward mobility.