Urban
நகரம், நகர் சார்ந்த
தமிழ் விளக்கம்
நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனிதக் குடியிருப்பு ஆகும். நகரம் என்பதற்குச் சரியான வரைவிலக்கணம் கிடையாது. வெவ்வேறு நாடுகளில் இதற்கு வெவ்வேறு வகையான வரைவிலக்கணங்கள் கொடுக்கப்படுகின்றன. பல மக்கள் ஒன்று கூடி வாழும் இடத்தை 'நகரம்' என்று அழைத்தனர். நகர் என்னும் வினைச்சொல் நகர்தல் என்னும் வினையைக் குறிக்கும். மக்கள் செழிப்பான இடங்களைத்தேடி நகர்ந்து வந்ததால் இது 'நகரம்' என்று அறியப்படுகிறது. மாநகரம், நகரம், புறநகரப் பகுதிகள் போன்ற நகரத் தன்மை கொண்ட பகுதிகள் நகர்ப்புறங்கள் (urban) எனப்படுகின்றன. இப்பகுதிகள் பெரும்பாலும் அதிகக் குடித்தொகை அடர்த்திகளைக் கொண்டிருப்பதுடன் (Population Density), கிராமங்களைப் போல வேளாண்மையை அடிப்படையாகக் கொள்ளாமல், பொருளுற்பத்தி, வர்த்தகம், கைத்தொழில், பல்வேறு சேவைத் தொழில்கள் ஆகியவற்றைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இன்று பெரும்பான்மை (50% மேற்பட்ட) உலக மக்கள் நகரங்களிலேயே வாழ்கின்றனர். இந்தியாவில் அதிகபடியாக தமிழ்நாட்டில் 47% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். இந்தத் தொகை அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்கிறது. நகரங்கள் வெறும் கட்டிடங்களால் ஆன இடங்கள் மட்டுமல்ல, அவை மனித உறவுகளை, பண்பாட்டை, நுட்பத்தை ஏதுவாக்கும், வெளிப்படுத்தும் வாழ்விடங்கள். கிராமத்துடன் ஒப்பிடும் பொழுது நகரங்கள் வேறான ஒரு வாழ்வியல் முறையைக் கொண்டுள்ளன. நகர மனிதனின் பண்பும் வேகமும் வேட்கையும் கிராமத்து மனிதர்களில் இருந்து சிறிது வேறுபட்டு அமைகின்றன. இன்றைய போக்குவரத்து, தொடர்பாடல், தொழில்நுட்பம் இந்த வேறுபாடுகளைக் குறைத்திருந்தாலும் கிராம - நகர வேறுபாடுகள் முற்றிலும் மறையவில்லை.

English
nk-tank and research organization founded in 1968 to facilitate, coordinate, and interpret research on social and economic problems and to propose understandable solutions to these problems.