urban homesteading

நகர்ப்புறப் பண்ணைவீடுகள்

தமிழ் விளக்கம்

பாராமரிக்கப்படாததால் பயனற்றுப் போய்விட்ட நகர்ப்புற வீட்டு மனைகளையும், விரிவாக்கப் பகுதி பண்ணை வீடுகளையும், சீரமைத்து, அங்குள்ள காலியிடத்தை உணவுபயிர்கள் விளைவிக்கவோ, கால்நடை வளர்ப்புக்கோ பயன்படுத்தி, உணவில் ஓரளவு சுயசார்புத் தன்மையை அடைய உதவும் நடைமுறை. இந்த மாற்றுமுறை, நகர்ப்புற மீளுருவாக்க முறையாகவும், வணிகமயப்படுத்தப்பட்ட பொருளாதார முறைகளுக்கு எதிரான வாழ்வியல் முறையாகவும் கருதப்படுகிறது. நகர்ப்புற பண்ணைவீடுகள் அமைப்பதற்கு அமெரிக்காவிலுள்ள பல்வேறு மாநில அரசுகள் மானியங்களும், ஊக்கத்தொகையும், கடனுதவியும் அளிக்கின்றன.
பார்க்க: Urban Agriculture - நகரத்து எல்லைக்குள்ளோ அதன் எல்லைக்கு அருகாமையிலோ (விரிவாக்கப் பகுதியிலோ) வேளாண்மை செய்வதை நகர வேளாண்மை (Urban Agriculture) எனலாம். இச்செயல்பாடு உணவு உற்பத்தியைப் பெருக்கவும் தரமான உணவை நகர மக்கள் பெறவும், உணவுத் தன்னிறைவைக் காணவும் உதவுகின்றது. கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண்காடு வளர்ப்பு, நகரத் தேனீ வளர்ப்பு (Urban beekeeping), தோட்டக்கலை (horticulture) போன்றவையும் நகர வேளாண்மையுள் அடங்குகின்றன. இதே செயற்பாடுகள் நகரத்தை ஒட்டியுள்ள இடங்களிலும் இடம்பெறுகின்றன. நகர வேளாண்மை பொருளாதார, சமூக வளர்ச்சியில் பல மட்டங்களைக் கொண்டுள்ளது.
பார்க்க: gentrification - மேன்மைப்படுத்தல், நடுத்தர வர்க்கப்படுத்தல், குறைந்த வருவாய்ப் பிரிவினரின் குடியிருப்புகளை வாங்கி அதை மேம்படுத்தி நடுத்தர வர்க்கம் குடியேறுவது. ஏழ்மையும் நெரிசலுமிக்க குடிசைப்பகுதிகளை அதன் இடமுக்கியத்துவம் கருதி வசதியானவர்கள் வாங்கி, அதன் நிலத்தோற்றத்தை மேம்படுத்திக் குடியேறும்போது அந்த இடத்திலுள்ள பிற வீட்டுமனைகளின் சொத்து மதிப்பு மற்றும் வாடகை உயரும் வாய்ப்புள்ளதால், அங்கு வீடு வைத்திருக்கும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு அது சாதகமாக மாறும்.

English

The process of occupying a formerly empty house, usually in a run-down city neighborhood, and living in it while restoring it. Often this is made possible by government laws, grants, and tax incentives to encourage community improvements. See also gentrification.