urban renewal

நகரப் புணரமைப்பு

தமிழ் விளக்கம்

சீர்கெட ஆரம்பிக்கும் நகர்புற குடியிருப்புப் பகுதிகளை புணரமைக்கவும், ஓரளவு கண்ணியமான குடியிருப்புகளுக்கு அருகாமையில் உருவாகும் மோசமான சேரிப்பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் செய்வதன் மூலம் நகரங்கள் மேலும் மோசமடைவதைத் தடுக்கவும் அமெரிக்க அரசால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களின் தொகுப்பும் மற்றும் சமூகக் கண்ணோட்டத்தையும் இச்சொல்லால் குறிப்பர். 1949 ஆம் ஆண்டைய வீட்டு வசதிச் சட்டமும் அதைப் பின்தொடர்ந்து இயற்றப்பட்ட சட்டங்களும், நகரப் புணரமைப்பிற்காக அமெரிக்க மத்திய அரசு திட்டமிடுவதையும், நிதிஒதுக்கீடு செய்வதையும் உறுதிப்படுத்தியது. இதோடு தொடர்புடைய 1970 ஆம் ஆண்டுச் சட்டம், உருவாகும் புது நகரங்கள் மற்றும் நகர்ப்புறக் குடியிருப்புகளில், சமுதாய வாழ்வை உயிரோட்டமுள்ளதாக உருவாக்க சமுதாய மேம்பாட்டுப் பணிகளை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்ததுடன் அல்லாமல், அதற்கான நிதி உதவியையும் அரசு செய்தது.
பார்க்க: gentrification - மேன்மைப்படுத்தல், நடுத்தர வர்க்கப்படுத்தல், குறைந்த வருவாய்ப் பிரிவினரின் குடியிருப்புகளை வாங்கி அதை மேம்படுத்தி நடுத்தர வர்க்கம் குடியேறுவது. ஏழ்மையும் நெரிசலுமிக்க குடிசைப்பகுதிகளை அதன் இடமுக்கியத்துவம் கருதி வசதியானவர்கள் வாங்கி, அதன் நிலத்தோற்றத்தை மேம்படுத்திக் குடியேறும்போது அந்த இடத்திலுள்ள பிற வீட்டுமனைகளின் சொத்து மதிப்பு மற்றும் வாடகை உயரும் வாய்ப்புள்ளதால், அங்கு வீடு வைத்திருக்கும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு அது சாதகமாக மாறும்.

English

A social philosophy and a set of programs designed to prevent urban blight in those areas where satisfactory housing exists, to tear down slums and replace them with new buildings where suitable housing no longer exists, and to rehabilitate neighborhoods that are beginning to decay. The Housing Act of 1949 (ch. 338, 63 stat. 413) and subsequent legislation provided for procedures by which cities could apply for federal urban renewal aid. In 1970 the act (Pi. 91-609) was revised to include new community development (CD), which can result in new additions to cities and freestanding new communities. Most federal urban renewal funding now comes through block grants. See also gentrification.