urbanization
நகர்மயமாதல், நகராக்கம்
தமிழ் விளக்கம்
நகர்ப்புறத் (urban) தன்மையின் அளவு அல்லது அதன் அதிகரிப்பு நகராக்கம் எனப்படுகின்றது. இது ஒரு குறிப்பிட்ட பகுதி, குறைந்த நகர்ப்புற இயல்பைக் கொண்டிருந்து, மிக அதிக நகர்ப்புற இயல்புடையதாக மாற்றம் பெறுவதைக் குறிக்கும் அதே நேரம், நாட்டுப்புறத் (rural) தன்மைகளைக் (கிராமங்கள்) கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதி நிர்வாகக் காரணங்களுக்காக அருகாமையிலுள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியுடன் இணக்கப்படுவதையும் நகராக்கம் என்ற சொல்லால் குறிப்பர். பொதுவாக நகராக்கத்தை அளவிடும்போது மொத்தக் குடித்தொகையின் எத்தனை விழுக்காடு நகர்ப்புறப் பகுதிகளில் வாழ்கின்றனர் என்று குறிப்பிடப்படுகின்றது. 2050 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர், நகரமயமாதலால் நகரங்களில் வசிப்பர் என ஒரு நிபுணர் குழு ஆராய்ச்சி கூறுகிறது. இன்று பெரும்பான்மை (50% மேற்பட்ட) உலக மக்கள் நகரங்களிலேயே வாழ்கின்றனர். இந்தியாவில் அதிகபடியாக தமிழ்நாட்டில் 47% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். இந்தத் தொகை அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
English
1. A social trend in which people adopt the lifestyles, residential patterns, and cultural values of those who live in or near cities. 2. The physical development of a rural area so that it includes features found in cities.