urinalysis
சிறுநீர் பரிசோதனை
தமிழ் விளக்கம்
சிறுநீர் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும். இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது. உடலின் உயிரணுக்களில் நிகழும் வளர்சிதை மாற்றங்களின்போது கழிவாக உருவாகும் பல பக்கவிளைவுப் பொருட்கள், குருதிச் சுற்றோட்டத்தொகுதியிலிருந்து அகற்றப்பவேண்டியது அவசியமாகும். உடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருட்கள், மேலதிக சில கரையங்கள், மேலதிகமாக உடலிலுள்ள நீர் போன்றன சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. உடலில் நிகழும் சில மாற்றங்களையும், பல நோய் நிலைகளையும் கண்டறிய சிறுநீர் மாதிரி பயன்படுத்தப்படுகின்றது. சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள் மட்டுமல்ல, அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கையும் கூட. உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே உணர்த்தும் எச்சரிக்கை மணி. சிறுநீர்ப் பரிசோதனையில் முக்கியமானது அல்புமின் பரிசோதனை. இந்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் உடலின் புரதம் வெளியேறுகிறது என்று அர்த்தம். இது சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்பம். சிறுநீரில் சர்க்கரை இருந்தால், அது நீரிழிவு என்பது பலருக்கும் தெரியும். சிறுநீரகத்தில் படியும் பொருட்களை வைத்து கிருமிகள் இருக்கிறதா, சிறுநீரக அழற்சிகள் இருக்கின்றனவா, நோய்த் தொற்றுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கலாம். சிறுநீர்ப் பரிசோதனையை எல்லோரும் செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை. குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகப் பாதிப்புகள், ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கை, கால்கள், முகம் போன்றவற்றில் வீக்கம் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறுநீர் போகும்போது எரிச்சல் இருந்தாலோ, நிறம் மாறினாலோ, அளவுகள் கூடினாலோ, குறைந்தாலோ பரிசோதனை அவசியம். சிறுவயதில் சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
English
Chemical testing of the urine to help determine the existence of certain diseases, potential diseases, or drug use. Urinalysis is the most convenient and common method of drug testing.