usury
அளவுக்கு மீறிய அநியாய / கந்து வட்டி
தமிழ் விளக்கம்
வட்டி என்பது ஒருவரிடமிருந்து பணம் கடனாகப் பெறுவதற்காகக் கொடுக்கப்படும் வாடகை ஆகும். பணம் கொடுப்பவர், அப்பணத்தைத், தனது சொந்த நுகர்வுத் தேவை உட்பட, வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தாமல் விடுவதற்கான நட்டஈடாகவே இது கொடுக்கப்படுகிறது எனலாம். முதலில் கொடுக்கப்படுகின்ற பணத்தொகை முதல் எனப்படுகின்றது. இவ்வாறு கொடுக்கப்படும் முதலுக்காக ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குக் கொடுக்கப்படும் வட்டி பொதுவாக அம்முதலின் ஒரு விழுக்காடாகவே (நூற்றுவீதம்) கணிக்கப்படுகின்றது. இந்த விழுக்காடு வட்டி வீதம் எனப்படும். வட்டி அது கணிக்கப்படும் முறையைப் பொறுத்து, எளிய வட்டி, தொடர் வட்டி, உண்மை வட்டி, கூட்டு வட்டி எனப் பலவகைப்படுகின்றது.
சட்டபூர்வமற்ற வட்டியின் வகைகள் -கந்து வட்டி மீட்டர் வட்டி வாரவட்டி தினகந்து வாரகந்து மாதவட்டி.
தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003) - மிக அதிக வட்டி வசூலிப்பதைத் தடை செய்வதற்காக கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க அடியாட்களைக் கொண்டு கடன் வாங்கியவர்களை பலவித இன்னல்களுக்கு ஆளாக்கியதால், ஏராளமானோர் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது. இது போன்ற நிலையைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல்வட்டி வசூலிப்பவர்கள் (கந்துவட்டி) மீது அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ 30,000 அபராதம் பரிந்துரைக்கலாம். இந்த அவசர சட்டத்தின் கீழ், போலீசார் 'மணிநேர வட்டி', 'கந்து வட்டி', 'மீட்டர் வட்டி' மற்றும் 'தண்டல்' போன்ற ஆடம்பரமான பெயர்களில் தினமும் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களைக் கருத்தில் எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

English
The act of charging excessive or unlawfully high rates of interest on loaned money. See also Truth in Lending Act.