utility programs

பயன்பாட்டு நிரல், பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட நிரல்கள்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட கணினிக்காக, ஒரு குறிப்பிட்ட பணிச்சூழலுக்கு, ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான எழுதப்படும் மென்பொருள். எடுத்துக்காட்டாக கணனியின் ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு கோப்புகளை மாற்ற உதவும், கோப்புகளை நகலெடுக்க உதவும், கோப்புகளை சேமிக்க உதவும், கம்ப்யூட்டர் வைரஸ்களை இனங்கண்டு அகற்ற உதவும் மென்பொருட்களின் தொகுப்பு.
நிரல் ஏற்பு மொழி (programming language ) என்பது ஒரு செயற்கை மொழி. இம்மொழியின் மூலம் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டு எந்திரங்களை செயல்பட வைக்கலாம். பலவிதமான நிரல் ஏற்பு மொழிகளைக் கணினியில் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஏற்பு மொழி மூலம் அந்த எந்திரத்தின் செயல்களைத் தேவைக்கு ஏற்றவாறு மாற்றலாம். இம்மொழியின் மூலம் ஒரு மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப அந்த எந்திரத்தை உபயோகிக்கலாம். எந்திரங்கள் என்பன எந்திரன் (ரோபோ robot), கணிப்பான் (கால்குலேடர்:calculator), கணினி (கம்ப்யூட்டர் Computer) போன்றவைகள் ஆகும்.
நிரல் மொழியைக் கொண்டு ஒரு நெறிமுறையைத் (அல்கோரிதம் Algorithm) தொகுத்து எழுதி அதனை எந்திரத்துக்கு உள்ளீடாகக் கொடுத்த பின்னர், அதனை அந்த எந்திரம் செயல்படுத்தும். அந்த செயல்பாட்டைப் பொருத்து ஒரு வெளியீடு கிடைக்கும்.
மேலும் இவை வன்பொருளை நேரடியாகக் கட்டுப்படுத்தும் சில்லு மொழி, இடைமொழிகள், பயன்நோக்கு மொழிகள் என பலவகைப்படும். நிரல் மொழிகளை கற்பதன் மூலம் மென்பொறியாளர் அல்லது நிரலர் ஆகலாம்.
அதிகப் பயன்பாட்டில் உள்ள நிரல் மொழிகள் - சி, சி++, சி சாப் (நிரலாக்க மொழி), ஜாவா, பி.எச்.பி, பெர்ள், பைத்தோன், விசுவல் பேசிக், எ.எசு.பி(Asp), ஜாவாஸ்கிரிப்ட், ஃபோர்ட்ரான், பாஸ்கல் நிரலாக்கல் மொழிகள்.

English

In the use of computers, the programs that help in the general running of the system for such things as transferring data from one storage site to another, making copies of files, locating and eliminating viruses, and saving data.