utility theory
பயனுடைமைக் கோட்பாடு, பயனோக்கக் கோட்பாடு
தமிழ் விளக்கம்
ஒரு பொருளை நுகர்வதால் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, திருப்தியைப் பொறுத்தே, அந்த மகிழ்ச்சியை, திருப்தியை அதிகப்படுத்தும் நோக்கோடு தன்னுடைய நுகர்வுத் தேவைகளை முன்னுரிமைப்படுத்துவான் என்ற பொருளியல் கோட்பாடு. ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விலையில் கிடைக்கும் பொருளே மனிதர்களால் அதிகமாக விரும்பப்படும் என்ற பொருளியல் நடைமுறை.
English
In economics, the concept that a person obtains satisfaction (utility) through the consumption of goods and that the individual will attempt to establish priorities of consumption to achieve the highest possible level of satisfaction. The theory suggests that the higher the level of satisfaction for a given cost and unit of time, the more desirable a particular item.