utilization review

பயன்பாட்டுத் திறனாய்வு

தமிழ் விளக்கம்

சமூக சேவை நிறுவனங்களுக்கு நிதி வழங்குபவர்கள், தங்களுடைய நிதி சரியான நோக்கங்களுக்குச் சரியான வகையில் பயன்படுத்தப்பட்டதா என்று நியாயப்படுத்த மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறை. அரசு அல்லது தனியார் நிதி உதவி பெரும் எல்லா நிறுவனங்களும் இந்த மதிப்பீடு முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த மதிப்பீட்டின் மூலமாக தாங்கள் வழங்கிய (நிதி) உதவியைக் கொண்டு, வழங்கிய நிதியின் மதிப்பை விட அதிக மதிப்புடைய / அல்லது உபயோகமான சேவைகள் வழங்கப்பட்டதா அல்லது வழங்கப்பட்ட நிதியின் மதிப்பை விடக் குறைவான அளவு சேவை வழங்கப்பட்டதா என்று அறியலாம். இந்த மதிப்பீடுகளை, செய்து முடிக்கப்பட்ட செயல்கள் (கடந்த காலப் பயன்கள்) மீதும், செய்து வருகின்ற செயல்கள் மீதும், செய்யப்படவிருக்கின்ற (எதிர்காலத்திய பயன்கள்) செயல்கள் மீதும் செய்யலாம்.
பார்க்க: quality assurance - தர உத்தரவாதம் - வியாபாரம், பொறியியல், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் தரம் எனப்படுவது 'மேன்மை' அல்லது 'கீழ்நிலைக்குச் செல்லாமை' என்று பொருள்படும். ஒரு பொருள் அல்லது சேவை என்பது கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைக்குள் இருப்பதைத் (Specification limits) தரம் என்று சொல்லலாம். உபயோகிப்பவரின் தேவையைப் பூர்த்தி செய்யும் திறன் அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருநதால், அதாவது அதன் 'நோக்கத்திற்குப் பொருத்தமுடையதாக இருந்தால், அதைத் தரமானது என்று சொல்லலாம். தரம் என்பது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக வரையறுக்கப்பட்டாலும், தரம் என்பதன் முதல் அர்த்தம் அது உபயோகிகப்படக் கூடியதாய் இருக்க வேண்டும். It should be fit for use. ஒரு பொருள் அல்லது சேவையின் நிர்ணயிக்கப்பட்ட பணி நிறைவேற வேண்டும். அதன் பிறகு, அதன் தோற்றம், அது கொடுக்கப்படும் விதம், சேவை, அதன் விலை, (appearance, packing, service, reliability, price), நம்பகத்தன்மை போன்ற விஷயங்கள் ஒரு பொருளின் தரத்தை நிர்ணயம் செய்யும். பலவகையான தரச் சான்றிதழ்கள் நடைமுறையில் உள்ளன. (ISI, ISO), பொருளுக்குக் கொடுக்கப்படும் தரச்சான்று, பொருளுற்பத்தி முறைக்குக் கொடுக்கப்படும் தரச் சான்று, உற்பத்தி முறைக்கும் சூழல் இணக்கமுடமைக்கும் கொடுக்கப்படும் தரச் சான்று என்று பல வகையான தர நிர்ணய முறைகள் உள்ளன. இவையெல்லாம் சீரான தரமிக்க பொருட்களை, சேவைகளை வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் தொழில்நுட்பத்தில் தயாரித்து, எதிர்பார்க்கும் விலையில் / கட்டணத்தில், பொருட்களையும் சேவைகளையும் குறித்த நேரத்தில் வழங்கவும், விற்பனைக்குப் பின்னும் சேவையைத் தொடரவும், நிர்வாக முறைகளில் ஒழுங்கமைவு கையாளப்படுகிறது போன்ற உத்தரவாதங்களைத் தரம் என்ற ஒற்றைச் சொல்லால் குறிப்பதுமுண்டு.
சமூகப்பணியில் தரம் என்பது ஒரு சமூகப்பணியாளர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளாரா என்பதிலிருந்து தொடங்கி, அவர் முறையான கண்காணிப்பில் அடிப்படைப் பயிற்சி பெற்றுள்ளாரா, தேவையான தகுதிச் சான்றிதழ்கள் பெற்றுள்ளாரா, அவர் திறன் மேம்பாட்டு தேர்வுகளில் தேர்ச்சியடைந்துள்ளாரா, அவர் தொடர்ந்து தன் அறிவை மேம்படுத்திக்கொள்ள முனைந்துள்ளாரா போன்ற பல கேள்விகளுக்கு கொடுக்கப்படும் உத்தரவாதம் ஆகும். மேலும் சமூகப்பணியின் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட தொழில் நெறிகள் (code of ethics), திறத் தொழில் தடைகள் (professional sanctions), சரியினையானவர்களைக்கொண்டு செய்யப்படும் திறனாய்வு (peer review, utilization reviews) போன்ற செயல்கள் தரத்திற்கு உத்தரவாதமளிக்கும் செயல்களே.

English

A formal process of evaluating the type and amount of service offered and delivered to organizations to determine if those services are justified. Organizations that receive funds from government bodies or other third-party groups are most likely to be subject to such evaluations, because the funders want to know if they are getting proper value for their costs. The review might determine the existence of over-utilization (too many services delivered or too many demands made on available services) or underutilization (insufficient demand or delivery to justify the costs spent on services). The reviews may be retrospective utilization reviews, concurrent utilization reviews, or prospective utilization reviews. See also quality assurance.