V Codes

V குறியீடுகள்

தமிழ் விளக்கம்

V in v codes stands for preVentive - மன நோய்களைக் கண்டறிய உதவும் புள்ளி விபரக் கையேட்டின் படி நோய்களாகாக் குறிக்கப்படாவிட்டாலும், மனநல நிபுணர்களின் சேவையைப் பெரும்பொருட்டு வாடிக்கையாளர்கள் சொல்லும் பிரச்சனைகளாகும். வி குறியீடு நிலையும் மற்றும் அவற்றின் எண்களும் சில பிரச்சனைகளைக் குறிக்கும். V61.8 உடன்பிறந்தவர்களிடமும், V61.1 பெற்றோரிடமும், V61.20 பெற்றோர் குழந்தைகளுக்கிடையே உள்ள மனரீதியாகவோ அல்லது மருத்துவக் காரணங்களாலோ உருவாகும் உறவு முறைச் சிக்கல்களைக் குறிக்கும். V 61.9 ஒரு குழந்தையை அலட்சியம் செய்வது, உடல்ரீதியாகத் துன்புறுத்துவாது, பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்குவதைக் குறிக்கும். V 61.1 பெரியவர்களை உடல்ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ வன்முறைக்குள்ளாக்குவதைக் குறிக்கும். V 15.81 பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பின்பற்றாததைக் குறிக்கும். V 65.2. நோயாளி போல் பாசாங்கு செய்தலைக் குறிக்கும். V71.01 பெரியவர்களின் சமூக விரோத நடத்தையையும், V71.02 சிறுவர்களின் சமூக விரோத நடத்தையையும் குறிக்கும். V62.89 மந்தமான அறிவாற்றலையும் V780.9 வயதிற்கேற்ற அறிவாற்றல் திறன் குறைந்து வருவதையும், V62.82 உற்றார் உயிரிழப்பினால் உருவான கையறுநிலையையும், V62.3 கற்பது தொடர்பான பிரச்சனைகளையும் குறிக்கும். V62.89 என்பது மதம் மற்றும் ஆன்மீகத் தளத்தில் ஏற்படும் மனக்குழப்பங்களையும், V62.4 பிறபண்பாடு ஏற்றல் அல்லது பிற பண்பாட்டுடன் இணக்கமுறலில் ஏற்படும் பிரச்சனைகளையும், V62.89 என்பது ஒவ்வொரு வாழ்க்கைப்பருவச் சவால்களை எதிர்கொள்ள முடியா இயலாமையைக் குறிக்கும். இந்த வகைப்பாடு காப்பீடு நிறுவனங்கள் சிகிச்சைக்கான செலவினங்களைத் தருவதற்கோ அல்லது மறுப்பதற்கோ காரணமாக அமைகின்றன.

English

A list of conditions that are not specific mental disorders but are included in the American Psychiatric Association's DSM-IV because they are frequent reasons for which individuals seek the services of mental health professionals. The V Code conditions and their numbers include the following: relational problems, including those with siblings (V61.8), partners (V61.1), parent-child (V61.20), and those relational problems related to a mental disorder or general medical condition (V61.9); problems related to abuse or neglect, including physical or sexual abuse or neglect of a child (V61.21) or physical or sexual abuse of an adult (V61.1); noncompliance with treatment (V15.81); malingering (V65.2); adult antisocial behavior (V71.01); child or adolescent antisocial behavior (V71.02); borderline intellectual functioning (V62.89); age-related cognitive decline (V780.9); bereavement (V62.82); academic problem (V62.3); occupational problem (V62.2); identity problem (V313.82); religious or spiritual problem (V62.89); acculturation problem (V62.4); and phase-of-life problem (V62.89). Organizations that make a third-party payment tend to reject treatment reimbursement claims if these are the sole reasons for treatment.