vaginismus
யோனி தசைச்சுருக்கம், அல்குல் தசைச்சுருக்கம், யோனி இறுக்கம்
தமிழ் விளக்கம்
யோனி (புணர்புழை) வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுறவு கொள்கிறாள். உடலுறவு கொள்ளும் போது, புணர்புழையின் (யோனி, vagina) சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனைவதன் மூலமும், கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (clitoris) மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலமும் யோனி விரிவடைகிறது. மருத்துவ மற்றும் உளவியல் காரணங்களால் யோனித்தசைகள் விரிவடையாத பொழுது ஆண் குறியை உள்நுழைக்கும் போது, இருவருக்கும் அது வலியேற்படுத்தும். இது உடலுறவில் உள்ள நாட்டத்தைக் குறைப்பதால் தம்பதிகளுக்குள் பிரச்சனை ஏற்பட வழிவகுக்கும்.
பார்க்க: dyspareunia - புணர்வலி, உடலுறவின் போது ஏற்படும் வலி, வலிமிகுப் புணர்ச்சி, புணர்ச்சிச் சிக்கல் - இது மோசமான (dys) படுக்கைத் தோழன் (pareunia - bedfellow) இணை (mate) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. உடலுறவின் போது மருத்துவ அல்லது மனரீதியான காரணங்களால் வலியை உணர்வார்கள். இந்த அறிகுறி ஆண்களை விடப் பெண்களிடத்தில் அதிகமாக, ஐந்தில் ஒருவருக்கு ஏற்படும். இந்த வலியின் காரணத்தை அறிந்துகொண்டால் அதிலிருந்து விடுபடமுடியும்.

English
A sexual disorder in women in which continuing involuntary spasms of the musculature of the outer third of the vaginal wall interfere with satisfactory coitus. See also dyspareunia.