vaginitis

புண்டையழற்சி, பெண் இனச்சேர்க்கை உறுப்பு அழற்சி, யோனியழற்சி, புணர்புழையழற்சி

தமிழ் விளக்கம்

யோனியழற்சி (Vaginitis) என்பது யோனியில் ஏற்படும் அழற்சியைக்** குறிக்கிறது. இதனால் பெண்குறியில் கசிவு, தோல் அரிப்பு, வலி ஆகியவை ஏற்படுகிறது. இது புணர்புழையில் எரிச்சல், நோய்த்தொற்று ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. யோனியழற்சி, சாதரணமாக நோய்த்தொற்றினால் ஏற்படுகிறது. யோனியழற்சியில் மூன்று வகைகள் அறியப்பட்டுள்ளன. அதிகளவு பாக்டீரியா வளர்வதால் ஏற்படும் பாக்டீரிய நுண்ணுயிர் நோய் (bacterial vaginosis; BV), கண்டிடா அல்பிக்கன்சு என்னும் பூஞ்சனத்தால் ஏற்படும் பெண்குறிப் பூஞ்சன நோய் (vaginal candidiasis), டிரைகோமானசு வெஜினாலிசு என்னும் முதலுயிரி ஒட்டுண்ணியால் ஏற்படும் திரிக்கோமோனியம் (trichomoniasis). நோய்த் தொற்றுகளைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும் என்றாலும் சில பொதுவான அறிகுறிகள் யோனியழற்சியில் உண்டு. அதே நேரத்தில், அறிகுறிகள் இல்லாமலும் யோனியழற்சி ஏற்படலாம்.
**அழற்சி (Inflammation) என்பது காயங்கள், தீப்புண்கள், அடிபட்ட இடங்களில் திசுக்களின் சேதம் மற்றும் இதர உயிரணுக்களின் வினையால் உடம்பில் நிகழும் எதிர்ப்பாற்றல் சார்ந்த செயலாகும்.

English

An inflammation of the vagina, caused primarily by the presence of an excessive number of otherwise harmless micro-organisms.