values

விழுமங்கள், மதிப்பீடுகள், பண்புகள், மதிப்புடைய ஒன்று, தனி மனிதர்கள் மற்றும் சமூகக் குழுக்களின் உணர்வு சார்ந்த நம்பிக்கை

தமிழ் விளக்கம்

தனி நபர்களாலோ, மக்கட் குழுக்களாலோ அல்லது கலாச்சாரத்தாலோ முக்கியமானதென்று விரும்பப்படும் வழக்கங்கள், நம்பிக்கைகள் நடத்தை நெறிகளை விழுமங்கள் / மதிப்பீடுகள் எனலாம். சமூகப்பணியாளர்கள் அவர்களின் தொழில்முறை சார்ந்து சில விழுமங்களை விரும்பத்தக்கதாகவும், பின்பற்றத்தக்கதாகவும் வகுத்துள்ளனர். மானுட சேவை, சமூகநீதி, தனிமனிதர்களின் உள்ளார்ந்த மதிப்பு மற்றும் கண்ணியத்தின் மீதான நம்பிக்கை, மானுட உறவுகளின் முக்கியத்துவம், செய்தொழிலில் பின்பற்றப்படவேண்டிய நாணயம் / நேர்மை மற்றும் செய்தொழில் திறன் மற்றும் நேர்த்தி போன்ற விழுமங்களை சமூகப்பணியின் / சமூகப்பணியாளரின் அடிப்படை விழுமங்களாக தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் வரையறுத்துள்ளது.

English

The customs, beliefs, standards of conduct, and principles considered desirable by a culture, a group of people, or an individual. Social workers, as one group, ascribe to a set of core values on which social work's mission is based. These core values, as specified in the NASW Code of Ethics (see appendix), are service, social justice, dignity and worth of the person, importance of human relationships, integrity, and competence.