variable
மாறி
தமிழ் விளக்கம்
மாறி (Variable) என்பது கணித்தலின்போது மாறக்கூடிய ஒரு பெறுமானத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு குறியாகும். எடுத்துக்காட்டாக y என்ற மாறி, சூரிய வெப்பத்தைக் குறிப்பதாகக் கொண்டால், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெப்பநிலை மாறும் பொழுது, அதற்கேற்ப y யின் அளவு / மதிப்பு மாறும். இங்கே y என்ற மாறி வெப்ப நிலையை அல்லது மதிப்பீட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. மாறும் நேரத்தை x என்ற இன்னுமொரு மாறி கொண்டு குறிக்கலாம். x அல்லது நேரம் இயல்பாக மாறுகின்றது. அது எந்த ஒரு காரணிகளிலும் தங்கி அல்லது சார்ந்து இருக்கவில்லை. இத்தகைய மாறியை சாரா மாறி (Independent) என்பர். ஆனால், y அல்லது சூரிய வெப்பம் நேரத்தைச் சார்ந்து இருக்கின்றது. சாதாரண ஒரு நாளில் அதிகாலையில் இள வெப்பமாகவும், நடுப் பகலில் உச்ச வெப்பமாகவும், மாலை வேளையில் வெப்ப நிலை தணிந்தும் இருக்கும். ஆகையால், பொதுவாக வெப்பம் நேரத்தைச் சார்ந்து மாறுகின்றது எனலாம். ஆகையால் y யை சார் மாறி (dependent) என்பர். மாறிகள் மேற்கூறியவாறு சாரா மாறி என்றும், சார் மாறி என்றும் இரு வகைப்படும். மாறி, தெரியாத ஒரு பெறுமானத்தைக் குறிக்கவும் பயன்படுகின்றது. கணிதச் சமன்பாடுகளில் x என்ற மாறி பொதுவாக நேரிடையாக வரையறை செய்யப்படாத ஒரு பெறுமானத்தைக் குறிக்கும். மாறி நிலையானது அல்ல எடுத்துக்காட்டு: ஒருவரது வயது. இந்த ஆண்டு 22 அடுத்த ஆண்டு 23. இங்கு வயது என்பது மாறி. 22, 23 என்பது அதன் மதிப்பு. ????????????
English
In social research, a characteristic that may vary or assume different quantified values. See also dependent variable and independent variable.