venereal diseases

பாலியல் நோய்கள், சிற்றின்பத்திற்குரிய, கலவியினால் தோன்றுகின்ற, ஒழுக்கக் கேட்டினால் ஏற்படுகிற நோய்கள், venereal

தமிழ் விளக்கம்

சம்போகத்தால் உண்டாகும் - பாலியல் நோய்கள் எனப்படுபவை பாலியற் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் நோய்களாகும். யோனிவழி, குதவழி மற்றும் வாய்வழிப் பாலுறவால் இவை பரவுகின்றன. பாலியற் தொடர்புகளாற் பரப்பப்படும் பெரும்பாலான நோய்களைச் சரியான மருத்துவ சிகிச்சை (பண்டுவம்) மூலம் முற்றாகக் குணப்படுத்தலாம். கருவுற்ற பெண்களுக்கு இந்நோய்கள் தொற்றினால் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்ற பாலியல் நோய்கள் எய்ட்ஸ் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்க வல்லன. முறையற்ற புணர்ச்சி, பால்வினை நோயுள்ள பாலியல் தொழிலாளியுடனான உறவு, பலதாரமணம், ஓரினச்சேர்க்கை போன்றவைகளால் இந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
பார்க்க: sexually transmitted diseases (STDs) - உடலுறவால் ஏற்படும் நோயே பால்வினை நோய் ஆகும். பால்வினை நோய் உள்ள ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பாதுகாப்பற்ற உடல் உறவின் மூலம் இந்நோய் பரவும். யோனிவழி, குதவழி மற்றும் வாய்வழிப் பாலுறவால் இவை பரவுகின்றன. முறையற்ற புணர்ச்சி, பால்வினை நோயுள்ள பாலியல் தொழிலாளியுடனான உறவு, பலதாரமணம், ஓரினச்சேர்க்கை போன்றவைகளால் இந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. பால்வினை நோயானது வைரஸ், பாக்டிரியாக்கள் மற்றும் காளான்கள் போன்ற வெவ்வேறு வகைக் கிருமிகளால் உண்டாகும் 30 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நோய்களாகும். கருவுற்ற பெண்களுக்கு இந்நோய்கள் தொற்றினால் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்ற பாலியல் நோய்கள் எய்ட்ஸ் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்க வல்லன. பாலியற் தொடர்புகளாற் பரப்பப்படும் பெரும்பாலான நோய்களைச் சரியான மருத்துவச் சிகிச்சை (பண்டுவம்) மூலம் முற்றாகக் குணப்படுத்தலாம்.
பால்வினை நோயின் அறிகுறிகளாவன - பிறப்பு உறுப்புகளில் புண் / சீழ் பிடித்தல், சிறு நீர் கழிக்கும் போது தொடர்ந்து பிறப்புறுப்புகளில் எரிச்சல், பிறப்புறுப்புகளின் மீது மருக்கள், நெறிகட்டுதல், அதிக அளவில் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், அடிவயிற்று வலி, ஆண் குறியில் வலியுடன் கூடிய (அ) வலி இல்லாத புண்கள், அரையாப்புக் கட்டி சீழ் வடிதல், விரை வீக்கம், ஆசன வாயைச் சுற்றிப் புண்கள் – மருக்கள். ஆசன வாயிலிருந்து சீழ் வடிதல், ஆசன வாயைச் சுற்றி அரிப்பு அல்லது எரிச்சல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். சில வகையான பால்வினை நோய்களின் அறிகுறிகள் சிகிச்சை எடுக்காமலேயே மறையும் தன்மை கொண்டது. ஆனாலும் நோய்க் கிருமிகள் உடலில் மறைந்து வாழும் தன்மை கொண்டது. அறிகுறிகள் மறைந்தாலும் சில வகையான பால்வினை நோய்கள் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பால்வினை நோயுள்ளவர், தானும் தமது உடலுறவுத் துணைவருடன் தொடந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

English

Infections acquired through sexual contact and the exchange of body fluids; these may include gonorrhea, syphilis, genital herpes, and acquired immune deficiency syndrome (AIDS). See also sexually transmitted diseases (STDs).