ventilation
அடங்கிய உணர்ச்சி வெளியீடு, அடக்கிய குறை தெரிவிப்பு, மனப் புழுக்கம் குறைவிப்பு
தமிழ் விளக்கம்
சிகிச்சையை நோக்கமாகக் கொண்ட சமூகப்பணியாளர் - வாடிக்கையாளர் இடையேயான உறவுமுறையில், வாடிக்கையாளர் அவர் போக்கில் உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிரச்சனைகளை விளக்குவுமான சூழ்நிலையை உருவாக்குவது. அடங்கிக் கிடக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த (Catharsis) வாய்ப்பு ஏற்படும்போது, வாடிக்கையாளரின் உள்மன அழுத்தம் குறைந்து, மனக்குழப்பம் மட்டுப்பட்டு, உணர்வு ரீதியாக மனம் லேசானதாக உணர்வார். இந்த உணர்வுத் தூய்மை வாடிக்கையாளரின் சிந்தனையில் தெளிவை உண்டாக்கி, அவரின் பிரச்சனைகளைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்ள உதவும்
அகத்தூய்மைப்பேறு பெறுவர்.
பார்க்க - purposeful expression of feelings - காரியப்பாட்டுடன் எண்ணங்குலைத்தல் - ஒரு சமூகப்பணியாளர் தன் வாடிக்கையாளரின் மனக்கிடக்கைகளை வெளிக்கொண்டுவருமளவு அவருடன் உறவு முறையைப் பேணும் தொழில்நெறி. சில உணர்வுகளை வாடிக்கையாளர் வெளிப்படுத்தாத பட்சம் அந்த உணர்வுகளே / எண்ணங்களே அவரைப் பலவீனமாக்கி, வலுவிழக்கச் செய்துவிடும். ஆகையால் சமூகப்பணியாளர் காரியப்பாட்டுடன் தனது வாடிக்கையாளரின் எண்ணங்குலைக்க ஏற்றவாறு உரையாடியும், கேள்விகளைக் கேட்டும், அவர் சொல்வதை கவனமுடன் கேட்டும், வாடிக்கையாளர் பதில்சொல்லத் தயங்கும் கேள்விகளையும், மதிப்பீடுகளையும் தவிர்க்கவேண்டும்.

English
In the social worker-client therapeutic relationship, the process of permitting the client to express feelings during the description of the problem situation. According to psychosocial theorists, this releases or discharges emotions that have built up and caused the individual to have internal stress and conflict. It is also referred to as catharsis. See also purposeful expression of feelings.