Verein für Socialpolitik

சமூகக் கொள்கைக்கான கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

ஜெர்மானியப் பொருளாதார நிபுணர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளடங்கிய சமூகக் கொள்கைக் கூட்டமைப்பு. இந்த அமைப்பு 1872 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை மையப்படுத்தி இருந்தாலும், சமூக நலத் திட்டங்களில், குறிப்பாக முதியோர் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களைப் பிரேரிபித்தது. இந்த அமைப்பின் பல்வேறு யோசனைகள் அரசின் சமூகநலத் திட்டங்களை வடிவமைக்கவும் அமுல்படுத்தவும் உதவியது.

English

The Association for Social Policy, a German professional organization of economists, lawyers, educators, and social scientists established in 1872. One of its first acts was to organize a conference on old-age and disability pensions. Although the Verein was primarily oriented to plans to organize industry and workers, many of its welfare proposals became adopted in the nation's first social insurance plans of 1881.