vicarious liability

மறைமுகப் பொறுப்பு, பிறர் பொருட்டு பொறுப்பு, பகரப்பொறுப்பு, பகரப் பொறுப்புரிமை, பகராள் கடப்பாடு

தமிழ் விளக்கம்

குடிமைப் பொறுப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவருடன் (பிரதிவாதி) தொடர்புடைய (எடுத்துக்காட்டாக பணியிலமர்த்தியவர், பணி மேற்பார்வையாளர், பயிற்றுனர்கள்) பிறருக்கும் தார்மீகப் பொறுப்புண்டு என்று சொல்லும் சட்டக் கருத்து.
பார்க்க: respondeat superior document - முதலாளியே / மேலாளரே பதில் சொல்லட்டும் என்ற கருத்தாக்கம் (Vicarious liability பகர்பொறுப்பு நிலை, பகரப் பொறுப்பு, பகராள் கடப்பாடு, (vicarious pleasure - பகராள் துய்க்கும் இன்பம்) - ஒரு தொழிலாளி பணியிடத்தில் செய்யும் காரியங்களுக்கு முதலாளி அல்லது மேலாளர் பொறுப்பேற்கவேண்டிய / பதில் சொல்லவேண்டிய சட்டப் பொறுப்பு. இது பணியாளர்களை மேலாளர்கள் கண்காணிக்க வேண்டிய நடைமுறையைக் குறிக்கின்றது. சமூகப்பணியில், ஒரு வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஒரு சமூகப்பணியாளர் காரணமாக இருக்கும் பட்சம், அந்த சமூகப்பணியாளர் மட்டுமல்ல அவரின் மேற்பார்வையாளரும் அந்த இழப்பீட்டிற்குப் பொறுப்பேற்கவேண்டிய கூட்டுப் பொறுப்பை இச்சொல்லாடல் குறிக்கின்றது.

English

The legal principle that civil liability may not necessarily be limited to the defendant but may extend to the defendant's employer, supervisor, instructors, and relevant others. For example, in social work an aggrieved client may include the worker's agency and supervisors as codefendants. See also respondeat superior document.