vice
குற்றம், பாவம், தீயொழுக்கம், கடுங்குற்றம், கீழ்த்தரச் சூழ்ச்சி, ஒழுக்கம் கெட்ட நடத்தை, குறைபாடு, ஒழுக்கமற்ற
தமிழ் விளக்கம்
விபச்சாரம், ஆபாசப் படங்கள் தயாரித்தல் மற்றும் விநியோகம், சூதாட்டம், போதை மற்றும் தடைசெய்யப்பட்ட மருந்து விற்பனை, கள்ளக் கடத்தல் போன்ற சட்டவிரோதமான, சமூக அறநெறிகளைப் பாதிக்கின்ற செயல்களைத் தீயொழுக்கம் எனலாம்.
குற்றங்கள், அறநூலுக்கு மாறானவும், அரசியலுக்கு மாறானவும், தெய்வத்திற்கு மாறானவும் என மூவகைப்படும். குடி பொய் களவு காமம் கொலை என்பன அறநூலுக்கு மாறானவை. இவை ஐம்பெருங் குற்றம் எனப்படும். பிறரிடம் வாங்கினதை மறுத்தலும், தன்னிடத்துள்ள பிறர் பொருளை ஒளித்தலும், கள்ளக் கையெழுத்தும், ஆள்மாறாட்டமும் பொய்யுள் அடங்கும். இறையிறுக்காமை, உறுபொருள் கவர்தல், பகையொற்று, அறைபோதல், அரசனது பொருள் கவர்தல், அரசனது இன்பப் பொருள் நுகர்தல், ஊருக்கு அல்லது நாட்டிற்கு இரண்டகஞ் செய்தல், அரசற்கிரண்டகஞ் செய்தல், அரசாணை மீறல், கொள்ளையடித்தல், கலகஞ்செய்தல் என்பன அரசியற்கு மாறான குற்றங்களாம். புதையலும் பிறங்கடையில்லாச் சொத்தும் உறுபொருளாகும். ஒப்பிப் பணிசெய்யாமை, கோயிற் பொருட்கவர்வு என்பன தெய்வத்திற்கு மாறான குற்றங்கள். கோயிலில் விளக்கெரிப்பதைத் தண்டனையாகப் பெற்றவனும், கோயிலில் விளக்கெரிக்கப் பொன் பெற்றவனும், அங்ஙனம் எரிக்காமையும்; கோயிற் பண்டாரத்திற் பெற்ற கடனுக்கு வட்டியிறுக்காமையும்; ஒப்பிப்பணி செய்யாமையாகும். கோயிற் கலங்களையும் அணிகலங்களையும் களவாடலும், வழிபாட்டு விழாச் செலவைக் குறைத்தலும் அடியோடு நிறுத்தலும் கோயிற் பொருட் கவர்வாகும். இவைகள் தெய்வக் குற்றங்களாகும்.

English
Criminal activity including prostitution, pornography, gambling, sales of illegal drugs or contraband, and other behaviors that are made illegal because they offend the community's moral standards.