victim blaming
பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுதல், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிசுமத்துதல்
தமிழ் விளக்கம்
ஒரு செயலால் பாதிக்கப்பட்டவர் அச்செயல் நடப்பதற்கு நேரடியாகவோ, மறைமுகவாகவோ உடந்தையாயிருந்தார், தூண்டுகோலாயிருந்தார் எனும் கண்ணோட்டம். எடுத்துக்காட்டாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்மணி தன்னுடைய நடை, உடை பாவனையால் அந்த நிகழ்வுக்குக் காரணமாயிருந்தார் எனும் குற்றச்சாட்டு. ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளான தம்பதி அதை விரும்புகிறார் (வலியேற்பு வெறி / வன்முறையை விரும்புதல்) என்று குற்றம் சுமத்துதல். ஒருவரின் சோம்பலால், முயற்சியின்மையால் தான் ஏழ்மைக்கு ஆளானர் என்று குற்றம் சாட்டுதல் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
English
A philosophy or orientation that attributes complicity to the person who is harmed by some social phenomenon. For example, a woman who is raped or sexually harassed is accused of seducing the attacker; an abused spouse is accused of being masochistic and encouraging the abusive action; or a poor person is accused of being too lazy to work.