victim-offender mediation
பாதிக்கப்பட்டவரையும், பாதித்தவரையும் (குற்றவாளியையும்) நடுவிருந்து இணக்குவித்தல் / மத்தியஸ்தம் செய்தல்
தமிழ் விளக்கம்
சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்களையும், அவர்களின் சட்ட விரோதச் செய்கைகளால் பாதிக்கப்பட்டவர்களையும் நேருக்கு நேராகச் சந்திக்க வைத்து, அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளைச் சமுதாயப் பின்னணியில் (கூட்டு முயற்சியில்) சரிசெய்ய எடுக்கப்படும் முயற்சிகள். குற்றவாளிகளின் குற்றச் செயல்களின் விளவை எடுத்துரைத்து, பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த மனவுளைச்சல் மற்றும் பொருள் இழப்பை ஈடுகட்டுமளவு இழப்பீடு பெறுவதே இந்த முயற்சியின் நோக்கம். எந்த மாதிரியான, எந்த அளவிலான இழப்பீடு என்பதை மத்தியஸ்தம் செய்பவர்கள் பரிந்துரைத்து அதைச் செயல்படுத்த உதவுவார்கள்.
English
A form of community-based corrections in which issues between lawbreakers and those they have harmed are dealt with in face-to-face confrontation. The goal is for material and emotional losses to be restored to the extent possible and to confront offenders with the consequences of their action. Mediators usually help propose and monitor agreed-on restitution.