victim-offender mediation programs
பாதிக்கப்பட்டவரையும், பாதித்தவரையும் (குற்றவாளியையும்) நடுவிருந்து இணக்குவித்தல் / மத்தியஸ்தம் செய்வதற்கான திட்டங்கள்
தமிழ் விளக்கம்
நீதிமன்றங்களின் வழிகாட்டுதலுடன் சமூக சேவை நிறுவனங்கள் குற்றமிழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும்படியான இழப்பீடுகளைப் பரிந்துரைத்து, பிணக்கு/ சச்சரவைத் தீர்த்து நல்லிணக்கம் செய்யும் முயற்சி. திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மத்தியஸ்தரிடம் அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை அவர்களிடம் நேரிடையாகப் பேசவைத்தோ, பிற வழிகளிலோ அவர்களின் உணர்வைப் புரிய வைப்பது. இருவரும் சம்மதிக்கும் பட்சத்தில் நேரடியாகப் பேசவைத்து, இழப்பின் தன்மையையும், இழப்பு தந்த மனவுளைச்சளையும் குற்றவாளியிடம் எடுத்துரைக்க வாய்ப்பு தருவது. ஈட்டுறுதி அல்லது இழப்பீடு என்பது பெரும்பாலும் இழந்ததற்கு இணையாகத் திரும்பக் கொடுத்தல், பாதிக்கப்பட்டவருக்காகப் பணிபுரிதல், பாதிக்கப்பட்டவர் பரிந்துரைக்கும் சேவா நிறுவனத்தில் பணியாற்றுதல் போன்ற செயல்கள் அடங்கும்.
English
A conflict resolution process sponsored primarily by social services agencies that work closely with the courts to develop mutually acceptable restitution plans and meet informational and emotional needs. The offenders are most often people convicted of theft or burglary who are referred to the mediator, who meets separately with offender and victim. Joint meetings may be held if both agree, and victims are given the rare opportunity to express their feelings directly to the offender. Restitution usually involves repayment, working for the victim, or working for a charity of the victim's choice.