video feedback

வீடியோ / காணொளிப் பின்னூட்டம் / நடந்து முடிந்த ஒன்றைப் பற்றிய பிறர் அபிப்பிராயம்

தமிழ் விளக்கம்

வாடிக்கையாளரின் நடை, உடை பாவனைகளைக் காணொளியாகப் பதிவு செய்து, அதைப்பற்றி பிறர் கருத்தறிந்து, அதன் மீது சிறப்புத் தொழிலினரோ அல்லது சமூகப்பணியாளரோ தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லும் நடைமுறை. இந்த நடைமுறை போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களுக்கும், குடும்பத்தினருடனோ அல்லது சகாக்களுடனோ தொடர்பாடல் பிரச்சனைகளுக்குள்ளானவர்களுக்கும், மனவுளைச்சளுக்கு ஆளானவர்களுக்கும், நடத்தைப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பெருமளவு உதவியிருக்கின்றது.
ஒலியின் மூலமாக கருத்தறிதல் - ஒருவர் நடந்து கொள்ளும் முறைபற்றி அவருடைய குடும்பத்தார் மற்றும் சகாக்களின் கருத்தை ஒலிப்பதிவு செய்து அதை வாடிக்கையாளரைக் கேட்கச் செய்து அதற்கு அவரின் எதிர்வினையை அறிதல். போதைப் பழக்கச் சிகிச்சையிலும், கருத்து பரிமாற்றப் பிரச்சனைகளிலும் ஒரு சிகிச்சை முறையாக இது கையாளப்படுகின்றது.

English

An intervention procedure by social workers and other professionals to show clients how they appear to others by showing videotape replays of the client's past behavior and systematically analyzing the results. The procedure has been used with effectiveness in working with clients who have substance abuse problems, emotional self-control problems, communications problems with family members or peers, or other behavioral problems. See also audio feedback.